Home » Archives for September 13, 2023

இதழ் தொகுப்பு September 13, 2023

நம் குரல்

மாற்றுங்கள்!

ஒரு நாட்டின் பிரதமர், தம் மக்களின் பக்கம் நிற்க வேண்டும். மக்கள் பிரச்னைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். அனைத்து மாநிலங்களையும் சமமாகப் பார்க்கவும் நடத்தவும் வேண்டும். எங்கே என்ன சிக்கல் எழுந்தாலும் உடனடி நடவடிக்கைகளுக்கு ஆவன செய்ய வேண்டும். ஆனால் நமது பிரதமர் மணிப்பூருக்குப் போக மறுக்கிறார்...

Read More
ஆன்மிகம்

காசி @ சென்னை 600033

இந்து சமய அறநிலையத் துறை கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தீயாக வேலை செய்திருக்கிறார்கள். நெடுங்காலமாகக் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ஆலயங்களை எல்லாம் புனரமைத்துக் குடமுழுக்கு நடத்திக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் இவர்களுக்கு ஆயிரமாவது ஆலயம், மேற்கு  மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயில். கடந்த பல மாதங்களாகத்...

Read More
இந்தியா

பா – ரத் – ஆகுமா?

பதிநான்காயிரம் கோடிகள். தென்னாப்பிரிக்க நாடான சுவாசிலாந்து தன் பெயரை எசுவாடினி என்று மாற்றிக்கொள்ளச் செலவான தொகையை வைத்து இந்தியாவுக்குச் செலவாகும் எனக் கணக்கிடப்பட்ட தொகை இது. ஏழைகள் நிறைந்த மத்திய வருவாய் நாடு எசுவாடினி. வளரும் நாடுகளோ அல்லது வளர்ந்த நாடுகளோ இப்படிப் பெயரை மாற்றிக் கொள்ளும்...

Read More
உலகம்

மக்கள் காசில் தேர்தல் செலவு: இது அமெரிக்க ஸ்டைல்!

அமெரிக்கத் தேர்தலைத் தொடர்கிறவர்களின் கவனத்தைக் கட்டியிழுப்பது, கொள்கைகளுக்கான விவாதங்கள் மட்டும் அல்ல. கட்சியின் அரசியல் செயற்மட்டக் குழுக்களும், அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களும் எவ்வளவு நிதி நன்கொடையாக வசூலித்தார்கள், யார் யார் எவ்வளவு நன்கொடை கொடுத்தார்கள் என்பதுவும் கூடத்தான். கடந்த 2020-இல்...

Read More
நகைச்சுவை

நான் ஒரு சங்கி

ஒரு மனுஷிக்கு எத்தனை பெயர் இருக்கலாம்..? ஒன்று, இரண்டு அல்லது மூன்று..? எனக்கு ஒன்பது பெயர்கள். ஒரே நேரத்தில் ஒன்பது பெயர்கள் வைத்துக் கொண்டு வாழ்வது என்பது எத்தனை சிரமம் தெரியுமா? அஷ்டலட்சுமிகளுக்காவது அவரது எல்லா பெயரும் லட்சுமி என்று முடியும்படி இருக்கிறது. ஆனால் எனக்கோ சம்பந்தா சம்பந்தமில்லாமல்...

Read More
தொடரும் வான் விண்வெளி

வான் – ஓர் அறிமுகம்

“ஆப்பிரிக்கர்களிடம் ஐஃபோன் உண்டா? அங்கே இண்டர்நெட் வசதி இருக்கிறதா? குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?” இப்படியெல்லாம் சந்தேகம் கேட்கும் நெட்டிசன்களுக்கு உடனுக்குடன் பதிலளிக்கிறார் உகாண்டா தேசத்து மாடல் அழகியொருவர். இடுப்பில் இலை குலைகளை அணிந்து கொண்டு காட்டுக்கு மத்தியில் போகிறார். பெரிய...

Read More
உலகம்

நடுங்க வைக்கும் நாசகாரக் கூட்டணி

‘உலகமே உன்னை எதிர்த்தாலும், துணிந்து நில்’ என்பார்கள். இத்தகைய துணிச்சலுடையவர் கிம் ஜோங்-உன், வடகொரிய அதிபர். இவருக்குச் சற்றும் சளைக்காதவர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். வடகொரியா உருவாக உறுதுணையாக இருந்தது அன்றைய சோவியத். அதற்கான நன்றிக்கடனைச் செலுத்தும் சந்தர்ப்பம் இப்போது அமைந்துள்ளது வட...

Read More
முதலீடு

வாழ்க நிலமுடன்!

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், கொஞ்சம் பணம் சேர்ந்தால் இங்கே அவரவர் சொந்த ஊரில் நிலம் வாங்கிப் போடுவது வழக்கம். சமீப காலமாகப் பல நாடுகளில் வேலை இழந்து, அல்லது இழந்த வேலை திரும்பக் கிடைக்கப் போராடிக்கொண்டிருப்போர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. வேலை கிடைப்பது ஒரு புறம் இருக்க, கையில் இருக்கும்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 42

42  தண்டபாணி தேசிகர் (27.08.1908 – 26.06.1972) இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றியவர். தமிழிசைத் துறையில் குறிப்பிடத்தக்க ஆளுமை. தமிழ்ப்பாடல்களைப் பாடுவதே கீழ்மை என்ற நோக்கு இருந்த காலங்களில் தமிழிசைப் பாடல்களைச் செல்லுமிடந்தோறும் பாடிப் பரப்பியவர்; பரவியவர். திருவையாற்றில் நிகழ்ந்து...

Read More
ஆன்மிகம்

பிள்ளையாரும் பால கங்காதர திலகரும்

விநாயகரை வழிபட்டு வணங்கி எந்தவொரு காரியத்தையும் செய்யத் தொடங்குவது ஆதி காலத்திலிருந்தே நிலவிவரும் வழக்கம். கோயில் குடமுழுக்கில் தொடங்கிப் புது வீட்டுக்குக் குடி புகுவது வரையில் எந்தவொரு சுப நிகழ்ச்சியும் கணபதி ஹோமம் செய்தே தொடங்கி வைக்கப்படும். பெரிய நிறுவனங்களின் கணக்குப் பதிவேடுகள் முதல் வீட்டு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!