Home » Archives for November 15, 2023 » Page 2

இதழ் தொகுப்பு November 15, 2023

சுற்றுலா

ஜருகு மலை: யாரும் சுற்றாத சுற்றுலாத் தலம்

சேலம் கிழக்குதொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டஒரு மாவட்டம்.வடக்கே சேர்வராயன்மலை, தெற்கே ஜருகுமலை, கிழக்கே கோதுமலை, தென்மேற்கே கஞ்சமலை என கிட்டத்தட்ட நான்கு எல்லைகளிலும் மலைகள் அமைந்த மாவட்டம். அதனால்தான் சேலத்து மாவட்டக்காரர்கள் கெத்தாக சொல்வார்கள்- மாவட்டத்தின் மையத்தில் இருந்து நாங்கள் எந்த பக்கம்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 76

76 ம்க்கும் ‘சமீபத்துல நான் எழுதின எதையாவது படிச்சியா’ என்று கேட்டார் பாலகுமாரன், மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் வாசல் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தவனிடம். ‘சமீபத்துல சிறுபத்திரிகைல எதாவது எழுதியிருக்கீங்களா என்ன’ என்று இவன் திருப்பிக் கேட்டான். ‘ம்க்கும்’ என்று...

Read More
விளையாட்டு

உலகைக் கலக்கிய தமிழ்நாட்டு மாப்பிள்ளை

நவம்பர் 7 2023. மெல்போர்னில் வசிக்கும், தமிழகத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் மற்றும் விஜயலக்ஷ்மி தம்பதியினரின் அலைபேசிகள் இரவு பத்து மணியிலிருந்து ஓயாமல் ஒலிக்க ஆரம்பித்தன. காதிலிருந்து கீழே வைக்க முடியாத அளவு தொடர்ந்து பாராட்டு மழை. “நானே இன்னும் மாப்பிள்ளையிடம் பேசவில்லை. இனிமேல் தான்...

Read More
உலகம்

ஒரு புதையல் போர்

புதையல் என்ற மந்திரச்சொல் மனிதகுலத்திற்கு அளப்பரிய ஆனந்தந்தை அளிப்பது. பொருளாதார ரீதியாகவும், மானுடத்தின் ஆதியை அறிந்து கொள்ளும் பாரம்பரிய ஆராய்ச்சிகள் தொடர்பாகவும், பழம் பண்பாட்டை அறிந்துகொள்ளும் ஆர்வத்திற்காகவும் என்று புதையல்களைத் தேடிய பல பயணங்களும், அகழ்வுகளும், ஆராய்ச்சிகளும் தொடர்ந்து...

Read More
உலகம்

எது வெல்லும்?

இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டபின், உள்நாட்டின் பாதுகாப்பும் தீவிரவாத எதிர்ப்பும் ஜனநாயகக்கட்சியின் முக்கியக் கொள்கையில் ஒன்றாகச் சேர்ந்து கொண்டது. மனித உரிமைகளுக்கு எந்த இடையூறுகளும் ஏற்படாமல் பாதுகாப்பதும் முக்கியக் கொள்கையாகச் சேர கொஞ்சம் கொஞ்சமாக இடது சாரி பக்கம் முழுவதுமாக மாறத் தொடங்கியது...

Read More
அறிவியல்-தொழில்நுட்பம்

இணையமில்லா உலகம்!

யாருடைய அலைபேசியிலும் சிக்னல் இல்லை. யாருக்கும் அழைக்க முடியாது. அலைபேசி, இணையம், தரை வழித் தொடர்பு என எதுவும் சாத்தியமில்லை. சமூக ஊடகங்களைத் திறக்கவும் முடியாது. வீட்டுக்கு வெளியில் என்ன நடக்கிறது எனத் தெரியாது. எமர்ஜென்சி எண்களும் வேலை செய்யாது. இப்படி ஒரு நாள் விடிந்தால் எப்படி இருக்கும்...

Read More
தொடரும் ப்ரோ

ப்ரோ – 5

குடும்ப அரசியல் என்பது தீண்டத்தகாத பெரும் பெரும் குற்றமல்ல. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் அரசியலில் ஈடுபடுவது ஒன்றும் தவறும் அல்ல. மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் தமக்குத் தோதாதான அரசியல் பின்புலம் கொண்ட குடும்பங்களை தம் ஆஸ்தான ஆதர்சமாய்க் கருதி அமோகமாய் வாக்குகளை வழங்கித் தேர்வு செய்து கொண்டிருந்தால்...

Read More
தொடரும் வான்

வான்-9

அந்தப் பதின்மூன்று திக்திக் தினங்களைத் தெரியுமா? மானுட குலம் அச்சத்தின் விளிம்புக்கே சென்று திரும்பிய இரு வாரங்கள் அவை! நிஜப் பேய்க்கதையொன்று சொல்லப் போகிறோம். வானியல் வரலாற்றுடன் நிச்சயம் தொடர்புள்ள கதைதான் . அமெரிக்காவில் ஜோன் எஃப் கென்னடி ஆட்சியிலிருந்தார். 1962, அக்டோபர் மாதம். உலகத்தின்...

Read More
மருத்துவ அறிவியல்

வயதுக்கு ரிவர்ஸ் கியர் போடலாம்!

நமது உடலில் ஓடும் இரத்தத்தில் பல்வேறு இரகசியங்கள் பொதிந்துள்ளன. அவற்றுள் இளமை திரும்புவதற்கான காரணிகளும் அடங்கும். மனிதன் உட்படப் பல்வேறு விலங்குகளின் உடலில் ஓடும் குருதியின் திரவப் பகுதி பிளாஸ்மா (Plasma) எனப்படும். இளம் வயது விலங்கின் பிளாஸ்மாவினை முதிர்ந்த விலங்குகளுக்கு அளிக்கும்பொழுது அந்த...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் – 51

 வ.சு.ப.மாணிக்கம் ( 17.04.1917 – 25.04.1989) எளிமையின் அடையாளமாக வாழ்ந்த பெருஞ்சுடர் அவர். சங்கத் தமிழ், தொல்காப்பியம், திருக்குறள் போன்ற இலக்கியங்களின் ஆழ அகலங்களை ஆய்ந்து முத்துக்களை எடுத்தவர். செட்டிநாட்டுப் பண்டிதமணியின் பெயர்சொன்ன சீடர். பள்ளியோ கல்லூரியோ செல்லவே அல்லாது தமது...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!