பழனி அருகிலுள்ள கணக்கம்பட்டி அழுக்குமூட்டை சித்தர் மிகப்பிரபலம். தமிழகம் முழுவதிலுமிருந்து அவரைக்காண பக்தர்கள் வருவதுண்டு. வரும் பக்தர்களிடத்தில் அவர் எப்போதாவது உரையாடும் போது, எங்கிருந்து வருகிறாய்? என வினவுவாராம். சேலத்தில் இருந்து வருகிறேன் என்று சொன்னால், என் தம்பி ஒருத்தன் அங்கே...
இதழ் தொகுப்பு May 2024
பத்து வயது சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டம். சிறுவர்கள், பெரியவர்கள் என குடும்பமே கூடியிருக்கிறது. வாழ்த்துக்களுடன் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு உண்கின்றனர். அடுத்த சில நிமிடங்களில் பிறந்த நாள் கொண்டாடிய அந்த சிறுமி மயங்கிவிடுகிறார். மற்றவர்களுக்கு வாந்தி, மயக்கம். அச்சிறுமியை...
முப்பரிமாண அச்சு இயந்திரம் (3D Printer) பற்றி அறிந்திருப்பீர்கள். மூலப்பொருட்களைக் குறிப்பிட்ட இடங்களில் குறிப்பிட்ட அளவில் அடுக்கடுக்காக அச்சிடுவதன் மூலம் முப்பரிமாணத்தில் பொருட்களை உருவாக்கும் தொழில்நுட்பம் இது. இது எண்பதுகளின் நடுப்பகுதியில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம். நாற்பது ஆண்டுகளில்...
மிக உயரமான ஒரு மலையைச் சுற்றிச் சாதாரணமாக எவ்வளவு குப்பை சேரும்? இலங்கையின் மத்தியில் அமைந்திருக்கிறது ‘சிவனொளிபாத மலை’. அதன் அடிவாரத்திலும், உச்சிக்குப் போகும் வழியிலும் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் இருபத்தைந்து தொன் மட்காத குப்பை சேர்ந்திருக்கிறது. இதில் ஐந்து தொன் வெறுமனே ப்ளாஸ்டிக்...
அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்குக் கடந்தசில வாரங்களாய் ஒழுங்காய்த் தூக்கம் இருக்கவில்லை. டென்ஷனில் நகம் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தார்கள். காரணம், பதினாறு வருடங்களுக்குப் பிறகு ஈரான் அதிபர் ஒருவர் இலங்கை வருகிறார். தூதுவராலயம் வழக்கத்தைவிடப் பரபரப்பில் இருந்தது. அவர்களின் ஆதங்கம் இதுதான்...
98 ஹீரோ ஓரிரு இலக்கியச் சிந்தனைக் கூட்டங்களில் தட்டுப்பட்ட, தன் புத்தக வெளியீட்டு விழாவில் பார்த்த முகத்தை பஸ்ஸில் பார்த்தது கொஞ்சம் பரபரப்பாக்கிவிட்டது. பெண்களை முன்பின் பார்க்காதவனோ பழகாதவனோ இல்லை என்றாலும் இந்தப் பெண் சற்றே வெட்கத்துடன் சிரித்ததைப்போலத் தோன்றியது வேறு ஆர்வத்தைக் கூட்டிவிட்டது...
கொரோனா பெருந்தொற்று இரண்டாண்டுகள் உலகையே உலுக்கிப் போட்ட சமயம்… சென்னையின் ஓர் ஓரத்தில் (இரத்தப்பரி)சோதனைகளையே சாதனையாக செய்து கொண்டு அமைதியாக அமைந்திருந்தது கிங்ஸ் இன்ஸ்டிடுயூட் என்னும் சோதனைச் சாலை. மருத்துவமனைகளெல்லாம் நிரம்பி வழிய, புல்லுக்குப் பொசிகிற நீர் போன்று இந்த கிங்ஸ்...
1960 முதல் 1990 ஆம் ஆண்டு வரை சோவியத் ரஷ்யாவில் இருந்து பல நூல்கள் நமக்குப் படிக்கக் கிடைத்துக்கொண்டிருந்தன. அறிவியல், வரலாறு, மதம், கம்யூனிசம், சோஷலிசம், அரசியல், இலக்கியம், சிறார் இலக்கியம் என இவை தொட்டுப்பேசாத துறைகளே இல்லை. ராதுகா, மிர், முன்னேற்றம் போன்ற பதிப்பகங்கள் இந்த நூல்களைத் தமிழில்...
செருப்பும்கூட செல்வத்தின் அடையாளம். செருப்பு விற்றே நூறு பில்லியன் டாலர் சம்பாதித்து உலகப் பணக்காரராகி விட்டார். அவர்தான் 61 வயது கிறிஸ்டியன் லொபோட்டின். 40 வருடங்களுக்கும் மேலாகச் செருப்பு தொழிலின் ராஜா. எப்படிச் செருப்பில் இவ்வளவு சம்பாதிக்க முடியும் என்று கேள்வி எழலாம். அதற்கு அவரின்...
3. இரு வேறு ஃபாரினர்ஸ் இன்னும் ஓர் இடமாற்றம். வேறொரு கிராமம். மற்றுமொரு பள்ளி. இப்போது நான் வளர்ந்த சிறுவன். நான்காம் வகுப்புக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். கேளம்பாக்கம் பஞ்சாயத்து ஒன்றியத் தொடக்கப்பள்ளி. இந்தத் தொடக்கப்பள்ளிக் கட்டடம் இருக்கும் அதே வளாகத்துக்குள்ளேயே அப்பா மாற்றலாகி வந்திருக்கும்...