Home » Archives for June 2024 » Page 2

இதழ் தொகுப்பு 9 months ago

உலகம்

இஸ்ரேல், ஹிஸ்புல்லா, இன்னொரு லட்டு

இன்ஸ்டாகிராமில் பிரபலங்கள் தாங்கள் சுற்றுலா செல்லும் நாடுகளைச் சுற்றிக் காண்பிப்பது போல இஸ்ரேலைச் சுற்றிக் காட்டும் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது ஹிஸ்புல்லா. வைரல் ஆனாலும் லைக்ஸ் இல்லை. ஏனெனில் இவர்கள் வெளியிட்ட ட்ரோன் விடீயோக்களில் இஸ்ரேல் ராணுவத் தலைமையிடங்கள், குடியிருப்புகள் எல்லாம்...

Read More
உலகம்

ஜி7 உச்சி மாநாடு: சாதித்தது என்ன?

இத்தாலியில் கடந்த வாரம் நடந்து முடிந்த G7 உச்சி மாநாட்டில் அரங்கேறிய காட்சிகள், ஒரு வழியாக ரஷ்ய அதிபர் புடினையும் வடகொரிய அதிபரையும் சந்திக்க வைத்திருக்கிறது. இந்த மாநாட்டில் G7 அமைப்பு நாடுகள், சட்டத்தை மீறிப் புலம் பெயர்ந்தவர்கள், பருவச்சூழல் போன்றவற்றைப் பற்றிப் பேசினாலும், முதல் நிலை...

Read More
இந்தியா

பிரியங்கா: வருகிறது ஒரு வலுவான எதிர்க்குரல்

1984-ஆம் ஆண்டு இந்திராகாந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டபோது பிரியங்கா காந்திக்கு வயது 12. அப்போது டேராடூனில் வெல்ஹம் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். 1991-ஆம் ஆண்டு பிரியங்காவின் தந்தை ராஜீவ் காந்தியும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். பாதுகாப்புக்...

Read More
உணவு

எனக்கு வேணும் குணுக்கு!

புசுபுசுவென மாவு பொங்கி, பந்துபோல உருண்டு வந்தால் இட்லி. அதுவே கொஞ்சம் நீர்த்துப் போனால் தோசை. புளித்துப் போனால் அதை ஈடுகட்ட வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு ஊத்தப்பமாகவோ பணியாரமாகவோ ஊற்றிக் கொள்ளலாம். இதுதான் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிமுறை. இதுவே அடை மாவு மீந்து போனால்...

Read More
aim தொடரும்

AIM IT – 11

விஸ்வரூபம் ‘ரன் அரவுண்ட்’ என்றொரு சிறுகதை. ஐசக் அஸிமோவ் எழுதியது. இக்கதை 1942-இல் வெளியானது. இதில்தான் முதன்முறையாக “ரோபாட்டிக்ஸ் விதிகள்” மூன்றினை வரையறை செய்திருந்தார் அஸிமோவ். • முதலாம் விதி: தன் செயலாலோ, செயலின்மையாலோ, ரோபாட் ஒருபோதும் மனிதர்களுக்குத் தீங்கிழைக்கக் கூடாது. • விதி இரண்டு:...

Read More
தமிழ்நாடு

விஷச்சாராயமும் விபரீதங்களும்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் நாட்டையே அதிர வைத்திருக்கின்றன. விஷச்சாராயம் அருந்திய அறுபது பேர் மரணம். நூற்று தொண்ணூற்று எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னட செய்தித் தொலைக்காட்சிகளிலும் இச்சம்பவம் பற்றிய விவாதங்கள் நடைபெறுகின்றன...

Read More
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 11

ஆராய்ச்சி, அதிவேகம், அற்புதம் இன்றுவரை கூகுளின் வெற்றிக்கு முதன்மைக் காரணமாக எல்லோருமே சொல்வது அதன் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளும் முறையைத்தான். இதற்கான விதை, நிறுவனத்தின் ஆரம்ப நாள்களிலேயே விதைக்கப்பட்டுவிட்டது. ஆராய்ச்சி, அதிவேகம், அற்புதம் என்ற மூன்று மந்திர வார்த்தைகள்தான் கூகுளை மற்ற நுட்ப...

Read More
உரு தொடரும்

உரு – 11

சிங்கப்பூர் உத்தமர்கள் தமிழ் இணையம் 99 மாநாட்டுக்குப் பிறகு, தமிழ்நாடு முழுக்க டேப், டேம் எழுத்துருக் குறியாக்கம் பயன்பாட்டுக்கு வந்தது. யூனிகோடு வந்த பிறகும்கூட சில அரசு அலுவலகங்களில் இம்முறை பயன்பாட்டில் இருக்கிறது. மலேசியாவில் திஸ்கியே தொடர்ந்தது. விசைமுகத்தைப் பொறுத்தவரை எதைத் தேர்ந்தெடுத்து...

Read More
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 11

11. மேலும் சில பழக்கங்கள் சம்பளம், கும்பளம் தொடர்பான பழக்கங்கள் தொடர்கின்றன. 4. வருமான வரி திரும்பக் கிடைக்குமா? ஒரு நாட்டில் உள்ள குடிமக்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பது அவர்களுக்குத்தான் தெரியும், அரசாங்கத்துக்குத் தெரியாது. அதனால், நிதி ஆண்டு முடிந்தபிறகு, அந்தக் குடிமக்கள்...

Read More
கல்வி

மீண்டும் நாளந்தா!

இந்திய வரலாற்றின் எல்லாப் பக்கங்களிலும் கல்வி மையங்களைப் பற்றிய தொடர்ச்சியான தரவுகள் இருக்கின்றன. அவற்றில் மிகப் பழமையான பல்கலைக்கழகமாக அறியப்படுவது நாளந்தா. நாளந்தா என்ற சொல்லுக்குத் தாமரையின் உறைவிடம் என்று ஒரு பொருளும், அறிவை அளிப்பவர் என்ற இன்னொரு பொருளும் உள்ளது. ஞானம் ஒரு தாமரையாகவே இந்திய...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!