சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில், சில ஆரம்பத் தடுமாற்றங்கள் அந்தப் பாடப்புத்தகங்களில் இருந்தன. சுட்டிக்காட்டப்பட்டதும் உடனடியாக அவை சரி செய்யப்பட்டன. அந்த ஒரு குறுகிய காலச் சம்பவத்தைத் தவிர, தமிழ்நாட்டு அரசின் பாடத் திட்டங்களில் எப்போதும் சிக்கலோ, குறையோ இருந்ததில்லை. அனைத்து...
இதழ் தொகுப்பு 4 months ago
திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து முடித்தவர் ஏ.ஜி.நூரனி. எழுபதுகளில் குஷ்வந்த் சிங், செய்தியாளர் வேலை செய்த பெண் ஒருவரை அறிமுகப்படுத்த நினைத்தாராம். நூரனிக்கும் இந்த யோசனை பிடித்துத்தான் இருந்தது. ஓபராய் ஓட்டல் லாபியில் சந்திக்க முடிவானது. நூரனி சொல்லப்பட்ட நேரத்திற்குச் சரியாகச் சென்றுவிட்டார்...
டெலிகிராம் செயலியின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ் (Pavel Durov) கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அசர்பைஜான் நாட்டிலிருந்து தனி விமானம் மூலம் பிரான்ஸ் நாட்டின் லெ போர்ஜே (Le Bourget) விமான நிலையத்திற்கு வந்தபோது இந்தக் கைது நடவடிக்கை நிகழ்ந்தது. ஃபிரான்ஸ் நாட்டுச் சட்டங்களின்...
கடந்த வியாழனன்று, 156 மருந்துகளை மத்திய அரசு தடை செய்தது. இவை எல்லாமே Fixed Dose Combination மருந்துகள். அம்மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்தை முற்றிலும் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வகை மருந்துகளின் மீதான பெரியளவிலான சட்ட நடவடிக்கைகளை அமைச்சகம் எடுத்திருப்பது இது இரண்டாவது முறை...
ஒரு மனிதக் குழந்தை முழுமையாக உருவாகுவதற்கான கர்ப்ப காலம் நாற்பது வாரங்களாகும். இந்த நாற்பது வாரங்களில் ஒவ்வொரு வாரமும் கருவின் வளர்ச்சிக்கு முக்கியமானதாகும். முப்பத்தேழு வாரங்களுக்கு முன்னர் பிறக்கும் குழந்தைகளை ஆங்கிலத்தில் Premature Babies என்று சொல்வார்கள். அதாவது கர்ப்பத்தில் முழுமையாக வளர்ச்சி...
21. பற்று உடலையும் மனத்தையும் வசப்படுத்துவதன் மூலம் சித்தத்தை சிவத்தில் நிலைநிறுத்த வழி சொன்ன சித்தர்களைப் பற்றிப் பார்த்துக்கொண்டிருந்தோம். தவிர்க்க முடியாமல் இந்த இடத்தில் சித்தருக்கு எதிர்ப்பாதையில் சென்ற புத்தரைச் சிறிது கவனிக்க வேண்டியிருக்கிறது. கவனம். நாம் பவுத்தத்துக்குள் செல்லப் போவதில்லை...
நான் பேச நினைப்பதெல்லாம்… ஏ.ஐயின் தாய்மொழி எது? சிலருக்கு இக்கேள்வியே பொருளற்றதாகத் தோன்றலாம். ஆனால் நீங்கள் ஓர் ஏ.ஐ ஆர்வலர் என்றால் இவ்வினா சுவாரசியமானது. ஏ.ஐ மனிதர்களின் மொழிகளில் எழுதுகிறது. பேசுகிறது. அப்படியென்றால் மனிதனுக்கு இருப்பது போலவே ஏ.ஐக்கென்று ஒரு தாய்மொழி உண்டா? அதற்கான...
உலகின் நீண்ட காலமாக விடுதலைக்குப் போராடும் பிராந்தியங்களுள் பலுசிஸ்தானும் ஒன்று. ஒரு வகையில் முன்பு இந்தியாவுக்குக் காஷ்மீர் எப்படியோ, அப்படி பாகிஸ்தானுக்குப் பலுசிஸ்தான். எனினும் இந்தியா, தீர்வை நோக்கிப் பல அடிகள் முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் பத்தாயிரம் அடிகளாவது பின்னோக்கிச் சென்றுள்ளது. இதுதான்...
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா சென்று பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். விரைவில் இந்தியப் பிரதமர் மோடியும் அமெரிக்கப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இந்தியா முழுவதற்குமான பொருளாதார நலனை முன்வைத்துப் பேச்சுவார்த்தைகள் நடத்துவதும் இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவதும் நோக்கம். ஸ்டாலின்...
21 ஆட்சியதிகாரத்தின் மொழி தூரத்தில் தெரியும் வெளிச்சம் நம்பிக்கையைக் கொடுக்கும். போய்ச் சேர்ந்துவிட்டதாக எண்ணிவிடலாகாது. மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் முரசு அஞ்சல் நிறுவிய திட்டம் அச்சமயத்தில் கிடைத்த பெரிய வாய்ப்பு. அதைவிடச் சிறிய திட்டப்பணிகள் சிலதும் முரசு சிஸ்டம்ஸ் செய்தது. ஒரு சில மாதங்களுக்கு...