Home » Archives for September 2024 » Page 3

இதழ் தொகுப்பு September 2024

உலகம்

இருளில் வாழ்ந்த தலைமுறை

எஸ்காம் மின்சக்தி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மைக்கேல் லோமாஸ் பிரிட்டன் நாட்டிலிருந்து போலீஸ் உதவியுடன் ஒரு வழியாகத் தென் ஆப்ரிக்காவிற்கு வந்து சேர்ந்தார். இவரும், இவருடன் 11 எஸ்காம் நிர்வாகிகளும் ஊழல், பணமோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம் போன்ற காரணங்களுக்காகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்...

Read More
நம் குரல்

மது விலக்கு மாநாடும் அவல நகைச்சுவை அரசியலும்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அக்டோபர் இரண்டாம் தேதி கள்ளக்குறிச்சியில் நடத்தவுள்ள மது ஒழிப்பு மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் கலந்துகொள்ளவிருப்பதாகத் தெரிகிறது. இதனை, ‘தமிழ்நாட்டு அரசு கலந்துகொள்ளவில்லை, அரசை வழி நடத்தும் கட்சிதான் கலந்துகொள்கிறது’ என்பதாகப் புரிந்துகொள்ள வேண்டும். மத்திய...

Read More
G தொடரும்

G இன்றி அமையாது உலகு – 23

23. வான், வளி, உயிர், இன்னபிற தேடல், மின்னஞ்சல், வீடியோ சேவை, புவியியல் வரைபடங்கள், செயற்கை நுண்ணறிவு என இணைய நுட்பம் சார்ந்து கூகுளின் வளர்ச்சியை விரிவாகப்பார்த்தோம். இவற்றைத் தாண்டி கூகுள் ஆராய்ச்சி நிறுவனம் இன்னும் பல முக்கியமான ஆராய்ச்சிகளில் இருக்கிறது. அவற்றையும் விரிவாகப்பார்த்துவிடலாம்...

Read More
இந்தியா

அமெரிக்காவில் ராகுல் : அன்பும் வம்பும்

“பிரதமர் மோடி மீது எந்த வெறுப்புணர்வும் இல்லை. அவர் மீது அனுதாபம் தான் ஏற்படுகிறது” என ராகுல் காந்தி தனது அமெரிக்கச் சுற்றுப்பயணத்தின்போது பேசியிருக்கிறார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மூன்று நாள் சுற்றுப்பயணமாகக் கடந்த வாரம் அமெரிக்காவுக்குச்...

Read More
சாத்தானின் கடவுள் தொடரும்

சாத்தானின் கடவுள் – 23

23. தீயினிலே வளர் சோதி வள்ளலார் என்று நாமறிந்த ராமலிங்க அடிகளை ஒரு வகையில் எதிர் புத்தர் என்று சொல்ல இயலும். இருவரது தேடலின் வழிகள் வேறு வேறு என்றாலும் விளைவு ஒன்று. கண்டடைந்தது ஒன்று. இருவரும் பயன்படுத்திய கருவியும் ஒன்றே. அறிவின் துணை கொண்டு மட்டுமே தமது தேடலின் விளைவைப் பகுப்பாய்வு செய்தவர்கள்...

Read More
உலகம்

பாகிஸ்தான் எண்ணெய் வளம் : வரமா? சாபமா?

சமீபத்தில் ஊடகங்களில், பாகிஸ்தான் நாட்டுப் பொருளாதாரத்தையே மாற்றக்கூடிய ஒரு சந்தர்ப்பம் அமைந்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன. அது அவர்களது கடல் பகுதிகளில் அதிக அளவிலான எண்ணெய் வளங்கள் இருக்கலாம் என்கிற அறிவிப்பு. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த ஆய்வின் முடிவில், உலகளவில் நான்காவது பெரிய...

Read More
சுற்றுலா

சிப்பிக்குள் உலகம்

கற்சிற்பங்களுக்குப் பெயர் போனது சென்னையின் மாமல்லபுரம். இந்தப் பிரம்மாண்டத்தின் அருகிலேயே அமைந்துள்ளது இந்தியக் கடற்சிப்பி அருங்காட்சியகம். இந்தியாவின் முதல் கடற்சிப்பி அருங்காட்சியகம். ஆசியாவிலேயே பெரியதும் கூட. சிப்பிக்குள் இருக்கும் முத்தை திறந்து பார்க்க நேரம் ஒதுக்கினால், புதுவிதமான...

Read More
இலக்கியம் கதைகள்

கணக்கு

விமலாதித்த மாமல்லன் புகார் கொடுக்கவேண்டும் என்று வந்து உட்கார்ந்து, தம்மை கன்சல்டண்ட் என்றும் ஆடிட்டர் என்றும் மாற்றி மாற்றிச் சொல்லிக்கொண்டு கசகசவென மூச்சுவிடாமல் ஏதேதோ பேசிக் கொண்டேயிருந்தவரை பேசவிட்டுப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த சிபிஐ இன்ஸ்பெக்டர், அவர் மூச்சுவிட எடுத்துக்கொண்ட முதல்...

Read More
உலகம்

இலங்கைத் தேர்தல் இறுதிச் சுற்று

இலங்கை தேர்தலில் கடைசி வாரம் அமர்க்களமாய் ஆரம்பமாகி இருக்கிறது. கொதிக்கிற கேத்தல் தண்ணீரைக் காலில் கொட்டிக் கொண்டதுபோல அலறிக் கொண்டு ஓடிக் கொண்டு இருக்கின்றார்கள் பிரதான வேட்பாளர்கள். செப்டம்பர் 21ம் தேதி சனிக்கிழமை நடக்க இருக்கும் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலிற்கு ஒரு சிறப்பு அந்தஸ்து இருக்கிறது...

Read More
விண்வெளி

விரும்பிச் சிக்கிய விண்வெளி வில்லியம்ஸ்

ஒரு பெண் அறுபதாம் பிறந்த நாளைக் கொண்டாடுவதெல்லாம் உலகச் செய்தியாக வரும் வாய்ப்பு உள்ளதா? வந்தது. சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்தில் சிக்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் செப்டெம்பர் 19ஆம் தேதி, தனது அறுபதுக்கு முந்திய ஹாப்பி பர்த் டேயினைக் கொண்டாடி மகிழ்ந்தார். அங்கே ‘சிக்கியிருக்கிறார்’ என்று சொல்வது...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!