Home » Archives for September 2024 » Page 4

இதழ் தொகுப்பு September 2024

aim தொடரும்

AIM IT – 23

ஸ்ட்ராபெர்ரி கண்ணே… அறிவு எல்லைகளற்றது. பிரபஞ்சம் போலவே. ஆனால் நாம் அறிந்து வைத்திருப்பது நிச்சயம் எல்லைகளுக்குட்பட்டது. இவ்வெல்லைகளே நம்மால் என்ன செய்ய இயலும் அல்லது இயலாது என்பதைத் தீர்மானிக்கின்றன. மனிதர்களுக்கு மட்டுமல்ல ஏ.ஐகளுக்கும் இது போன்ற அறிவு எல்லைகள் உள்ளன. மனிதர்களுடன்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு  குடும்பக்  கதை – 122

நம்பிக்கை துரோகம் 1962 அக்டோபர் 20. இந்தியா-சீன உறவில் அன்று ஒரு கறுப்பு தினம்.  இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான உடன் பிறப்பு உறவில் வெளிப்படையாக விரிசல் விழுந்த நாள்.  அரசியல் ரீதியாக நேருவின் ராஜ தந்திரத்துக்கு ஏற்பட்ட தோல்வி. இந்தியாவும் சீனாவும் சுமார் 3500 கி.மீ. தூரத்துக்கு நீண்ட...

Read More
இந்தியா

சாதிக் கணக்கால் சாதிப்பது என்ன?

தெருவில் போகும் யாரையாவது நிறுத்துங்கள். “இடஒதுக்கீடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” எனக் கேட்டுப் பாருங்கள். பெரும்பான்மையினரின் பதில், “தவறு” என்பதாகத்தான் இருக்கும். “கார் வைத்திருக்கும் தலித் பயன்பெறுகிறார்” என்பார்கள். எத்தனை தலித் மக்கள் அரசாங்கப் பணி, கார், பங்களா வசதியுடன் இருக்கிறார்கள்? இது...

Read More
உரு தொடரும்

உரு – 23

23 தமிழ் போட்ட சோறு ஆப்பிள் நிறுவனத்தில் வேலை செய்த முத்துவின் நண்பர் எச்டிசி நிறுவனத்திற்குப் பணி மாறிச் சென்றார். தைவானில் இருந்து தொலைபேசி மூலம் ஒருநாள் முத்துவை அழைத்தார் அந்த நண்பர். ஆன்ராய்டு தொழில்நுட்பத்தில் இயங்கும்படி இந்தி மொழிக்கு எழுத்துரு, கீபோர்டு எல்லாமே செய்ய வேண்டும் என்றார்...

Read More
இந்தியா

கொத்தடிமைகளாகும் இந்தியர்கள்

‘தனிமையில் இருக்கிறீர்களா? பேச்சுத் துணைக்கு யாருமில்லையா? உங்களுக்கு விருப்பமான பெண்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் தனிமையை விரட்டுங்கள். மகிழ்ச்சியாக இருங்கள்’ இப்படி வரும் பாப்-அப் விளம்பரங்களில் மயங்கிப் பணத்தை இழப்போர் ஏராளம். ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அது போன்ற செயலிகளையும்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 118

118 கோடைகாலக் குறிப்புகள் தன் தொகுப்பை வெளியிட்ட அனுபவத்தில் அடுத்த வருடமே தருமுவின் கட்டுரையைப் புத்தகமாகக் கொண்டுவந்ததில் நம்மால் எதையும் செய்யமுடியும் என்கிற தன்னம்பிக்கையோடு உற்சாகமாகத் திரிந்துகொண்டிருந்தவன் பேச்சோடு பேச்சாக ஒருநாள் சுகுமாரனிடம் கேட்டான். ‘நீ எப்பலேந்து கவிதை எழுதறே’ ‘ஸ்கூல்ல...

Read More
உலகம்

கமலா – டெய்லர் ஸ்விப்ட் : வெற்றிக் கூட்டணியா?

கடந்த முறை விவாதத்தில் டிரம்ப் பெற்ற வெற்றி அதிபர் வேட்பாளரையே மாற்றியது. தன்னை யாரும் வெல்ல முடியாது என்கிற நினைப்பில் இன்னொரு விவாதக் களத்துக்கு ஆர்வமாக ஒப்புக்கொண்டார் டிரம்ப். புதிய வேட்பாளர் கமலா ஹாரிஸ் வார்த்தைக்கு வார்த்தை கண்ணிவெடியைப் புதைத்துப் பேச, ஒன்றைக் கூட விடாமல் தேடிப்போய்...

Read More
இன்குபேட்டர்

நிலவுச் சுற்றுலா

சிறு குழந்தையோ பெரியவரோ வயது வித்தியாசம் இல்லாமல் பயணம் செய்வதென்றால் உற்சாகமடையாதோர் இல்லை என்றே சொல்லலாம். பயணங்கள் பல வகைப்படும். ஊரிலுள்ள கோயில் திருவிழாக்கள், உறவினர்கள் நண்பர்களின் வீட்டு விசேஷங்கள், உறவினர்களைப் போய்ப் பார்த்தல் போன்ற காரணங்களுக்காகச் செய்யும் அத்தியாவசியப் பயணங்கள், புண்ணிய...

Read More
தொடரும் பணம்

பணம் படைக்கும் கலை – 23

23. ஒர்ரூவாக்கு ரெண்டு பழம் கரகாட்டக்காரன் திரைப்படம் நினைவிருக்கிறதா? படத்தை விடுங்கள், அதில் வருகிற ‘வாழைப்பழ’ நகைச்சுவை நினைவிருக்கிறதா? கவுண்டமணி செந்திலிடம் ஒரு ரூபாயைக் கொடுத்து இரண்டு வாழைப்பழம் வாங்கிவரச் சொல்வார். செந்திலும் கடைக்குச் சென்று இரண்டு வாழைப்பழங்களை வாங்குவார்...

Read More
உலகம்

நிதியில் மூழ்காத நீதி

சொகுசுப் படகு (Luxury yatcht) என்பது அதிகச் செலவாகும் விஷயம். எலோன் மஸ்க் உட்பட, பில்லியன் கணக்கில் பணம் வைத்திருக்கும் உலகப் பணக்காரர்கள் பலர் இப்படிச் சொந்தமாக சொகுசுப் படகு வைத்திருக்கிறார்கள். சொந்தமாக இல்லாவிட்டாலும் வாடகைக்கு எடுத்து உல்லாசமாகப் பொழுதைக் கழிக்கலாம். அதிகமில்லை இந்தியப்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!