Home » Archives for November 20, 2024 » Page 2

இதழ் தொகுப்பு 1 day ago

உலகம்

இடப்பக்கம் திரும்பு

கடந்த பதினான்காம் தேதி நடந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கருத்துக் கணிப்பாளர்களும் எதிர்பார்க்காதது நடந்தது. எந்தவொரு அரசியல் விமர்சகர்களும் கனவு கூடக் காணாத ஓர் அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அறுபத்தொரு சதவீத வாக்குகளைப் பெற்று மொத்தம் இருநூற்று...

Read More
உலகம்

ஹனா அக்கா ஆடிய ஹக்கா

நியூசிலாந்து சென்ற வாரம் இரு சம்பவங்களால் உலக கவனத்தை ஈர்த்தது. ஒன்று அதன் பிரதமர் நாடாளுமன்றத்தில் இரண்டு லட்சம் மக்களிடம் மன்னிப்பு கோரினார். அந்நாட்டு அரசாங்கம் செய்த வரலாற்றுக் குற்றத்திற்காக. மற்றொன்று மவோரி மக்களின் உரிமையை நிலைநாட்டும் வைத்தாங்கி ஒப்பந்தத்தை அழிக்கும் மசோதாவை எதிர்த்து...

Read More
சண்டைக் களம் தொடரும்

சண்டைக் களம் – 2

எகிப்து மனிதனுடன் மனிதன் மோதிக்கொள்வதில் கல்லுக்கு அடுத்து அவன் பயன்படுத்திய ஆயுதம் தடி, சிலம்பம், கோல், கம்பு. எகிப்தில் அதன் பெயர் ‘தஹ்தீப்’. எதிரியைத் தொலைவில் நிறுத்தவும், ஓங்கிச் சுழற்றித் தாக்குவதால் எந்தச் சுழற்சியின் வீச்சு தன்னைத் தாக்குமோ என்னும் அச்சத்தில் எதிரியைத் திணறடிக்கவும்...

Read More
இலக்கியம் கதைகள்

அடி

விமலாதித்த மாமல்லன் ‘நரஹரி, நீங்க அண்ணாநகர் குவார்ட்டர்ஸ்லையா இருக்கீங்க’ என்றார் கோயம்பத்தூரிலிருந்து மகனின் உயர் படிப்புக்காகச் சென்னைக்கு  மாற்றல் வாங்கிக்கொண்டு வந்திருந்த சீனியர் இன்ஸ்பெக்டரான ராஜரத்தினம் பேச்சுவாக்கில். ‘ஆமா.’ ‘அங்க நமக்குத் தெரிஞ்சவர் ஒருத்தர் இருக்காருங்க’ என்றார்...

Read More
விளையாட்டு

டைசன் – ஜாக் பால் குத்துச்சண்டை : நெட்பிளிக்ஸ் அபார வெற்றி

2024, நவம்பர் 15ம் தேதி அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏடி அன் டி அரங்கில் ஏறக்குறைய எழுபதாயிரம் பார்வையாளர் அமர்ந்திருந்தனர். வெளியே கோடிக்கணக்கில் குத்துச்சண்டை ரசிகர்களும் விளையாட்டுப் போட்டி ஆர்வலர்களும் நெட்ஃப்ளிக்சின் லைவ் ஸ்ட்ரீமிங்கில் இணைந்திருந்தனர். அமெரிக்காவிலும் இந்தியாவிலும்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 127

127 தனிமரம் ரப்பர் செருப்பு கக்கூஸ் போவதற்காக அணிவது என்று குஷாலப்பா சொன்னதிலிருந்து மலிவான விலையில் கிடைக்குமா என்று ஷூ தேட ஆரம்பித்திருந்தான். பர்மா பஜார் பெட்ரோல் பங்கை ஒட்டிய கடையில் கருப்பு நிற ஷூ கொட்டிக்கிடந்தது. பார்க்க புரூஸ்லீ அணிவதைப்போல இருக்கவே, விலை கேட்டான். கடைக்காரன் மலிவாகச்...

Read More
தடயம் தொடரும்

தடயம் – 2

இறந்த நேரம் என்ன? அந்தக் கணவனை யாராலும் தேற்ற முடியவில்லை. அவன் விண்ணதிர மண்ணதிர ஓலமிட்டு அழுது கொண்டிருந்தான். “இத்தனைப் பாசமான கணவனுடன் இந்தத் துரதிர்ஷ்டக்காரிக்கு வாழக்கொடுத்து வைக்கவில்லையே!” பச்சாதாபப்பட்டனர் உறவினர்கள். “நான் ஆபிஸ் போன நேரத்துல உன்ன இப்படிப் பண்ணிட்டாங்களேம்மா. எவ்வளவு...

Read More
எனதன்பே எருமை மாடே தொடரும்

எனதன்பே எருமை மாடே – 2

மறு வடிவமைப்பு எமது உணர்வுகளைத் தூண்டிக் கோபம் வர வைப்பவர்களில் நமது குடும்பத்தினரும் நண்பர்களும் மட்டும் தனி உரிமை எடுத்துக் கொள்வதில்லை. நம்முடன் வேலை செய்யும் சக ஊழியர்களும் நமக்கு முன்பின் அறிமுகமில்லாதவர்களும் அவர்கள் செயல்கள் மூலம் எமக்குக் கோபம் வர வைப்பது உண்டல்லவா. சக ஊழியரிடமோ அல்லது...

Read More
தமிழர் உலகம்

எரிமலைத் தீவு

நவம்பர் பத்தாம் தேதி நடந்த மொரிசியஸ் நாடாளுமன்றத் தேர்தலில் நவீன் ராம் கூலம் வெற்றிபெற்றிருக்கிறார். இதற்கு முன்பு 2005 – 2014 வருடங்களில் இவர் அந்நாட்டின் பிரதமராக இருந்துள்ளார். நவீன் ராம் கூலத்தின் முன்னோர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவின் பீகாரிலிருந்து பணியாளர்களாக மொரிசியஸ்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!