Home » Archives for November 27, 2024

இதழ் தொகுப்பு November 27, 2024

காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 57

57. பிரிட்டிஷ் பேரரசை வாழ்த்துகிறேன் ‘மெட்ராஸ் மகாஜன சபை’ (MMS, Madras Mahajana Sabha) என்பது 1884ல் தொடங்கப்பட்ட சமூக சேவை அமைப்பு. அப்போது ‘மெட்ராஸ் பிரெசிடென்ஸி’ என்று அழைக்கப்பட்ட மிகப் பெரிய நிலப்பரப்பில் இயங்கிவந்த பல்வேறு அமைப்புகளுடைய பணிகளைத் தொகுப்பதும், மக்களுக்கு...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 57

57. நாமகரணம் மூன்றடி இடைவெளியில் அவனுக்கு எதிரே அமர்ந்திருந்தேன். அவனது உயரம் என்னைச் சிறிது கலைத்துக் கலைத்து ஆடிக்கொண்டிருந்தது. இயல்பில் நான் கட்டுமஸ்தான தோற்றத்தில்தான் இருப்பேன் என்றாலும் வளர்ந்துகொண்டிருந்த காலத்தில் யாரோ உச்சந்தலையில் கையை வைத்து அழுத்தி, நிறுத்தினாற்போலக் காட்சியளிப்பதாக...

Read More
நம் குரல்

குளத்தங்கரை நாகரிகம்

சென்னை நகரின் தீராப் பிரச்னைகளுள் முதன்மையானது, வடிகால் வழித் தடங்கள். மழைக்காலங்களில் பெரும்பாலான பகுதிகள் தாற்காலிக நீர்த்தேக்கங்களாகிவிடுவது வழக்கம். கடந்த சில வருடங்களாகச் சில பராமரிப்புப் பணிகளும் தற்காப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாலும் சிக்கல் முழுமையாகச் சரியாக...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 128

128 பத்து ஷங்கர் ராமன் வீட்டுப் பச்சை நிற இரட்டை மரக்கதவின் மேல்பகுதியில் மெல்லிய இரும்புக்கம்பிகள் பொருத்தப்பட்டிருக்கும். ஆளே ஒல்லி என்பதால் இவன் கைகளும் மெலிதானவை; விரல்களும் நீளம். எனவே, இவனே கைவிட்டுத் தாளிடப்பட்டிருக்கும் கதவைத் திறந்துவிடுவான். காலிங் பெல் அடித்தாலும் டிவி...

Read More
குட்டிச்சாத்தான் வசியக் கலை தொடரும்

குட்டிச் சாத்தான் வசியக் கலை – 3

ப்ராம்ப்ட் எனப்படுவது யாதெனின்… ப்ராம்ப்ட் என்பது வெறுமனே ஒரு கேள்வியல்ல. அது நாம் கொடுக்கும் ஆணை. நாம் விரும்பும் செயலை ஏ.ஐ திருத்தமாகச் செய்து முடிப்பது இந்த ஆணையைப் பொருத்ததே. ஓர் உதாரணம்: கவர்மெண்ட் ஆர்டர்களைப் (GO) பார்த்திருப்பீர்கள். நாளை விடுமுறை என்பது தான் செய்தியாக இருக்கும். ஆனால் நாளை...

Read More
இலக்கியம் கதைகள்

நன்றி

விமலாதித்த மாமல்லன் ‘ரொம்ப தேங்க்ஸ் சார்’ என்று கைகூப்பினார், அமராவதி எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் அனுப்பிவைத்ததாகச் சொல்லி, தம்மை குமரேசன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டவர். கும்பிட்ட கைகளுக்குள் இருந்த ரோஸ் நிற கவரை நீட்டினார். ‘எதுக்குங்க’ என்றார் அழகப்பன். ‘சரியா கைடு பண்ணி நல்லபடியா முடிச்சி...

Read More
திருவிழா

ஒரு ஊர்ல ஒரு உலகம்

ஐக்கிய அமீரகத்துக்கு நவம்பர் என்றால் வசந்த காலம். நான்கு , ஐந்து மாதங்கள் தொடரும் குளிர்காலத்தில் விடுமுறைகளும் திருவிழாக்களும் களைக்கட்டும். அதில் மிக முக்கியமானது குளோபல் வில்லேஜ் மேளா. குளோபல் வில்லேஜ் போகும் பார்வையாளர்களுக்கு உலக நாடுகளைச் சுற்றிப் பார்த்த பரவசம் கிடைத்துவிடும். ஒரே இடத்தில்...

Read More
சண்டைக் களம் தொடரும்

சண்டைக் களம் – 3

iii. ரோம், கிரேக்கம் சமகால விளையாட்டுப் போட்டிகளில் இடம்பெறும் மற்போரின் வகைகள் இரண்டு. ஒன்று ‘ஃப்ரீ ஸ்டைல்’ மற்போர் எனப்படும். இன்னொன்று ‘கிரீக்கோ-ரோமன்’ மற்போர் எனப்படும். கிரீக்கோ-ரோமன் என்னும் பெயரிலிருந்தே இந்த வகை மற்போர் ரோமானிய கிரேக்கப் பகுதிகளிலிருந்து...

Read More
உலகம்

ஸ்டாலின் கட்டிய எட்டாவது அதிசயம்

வருடம் 1946. சோவியத்தின் 75% சதவிகித எண்ணெய் தேவைகளை அசர்பைஜான் தான் பூர்த்திசெய்துகொண்டிருந்தது. அப்போது அசர்பைஜான் சோவியத் யூனியனின் அங்கம். அடுத்த பதினைந்து ஆண்டுகளில் எண்ணெய் இருப்பு மும்மடங்காக அதிகரித்திருக்க வேண்டும் என்று ஸ்டாலின் கட்டளையிடவே, வளங்களைக் கண்டடையும் பணிகள் உடனே...

Read More
இந்தியா

மக்கள் தீர்ப்பா? மகளிர் தீர்ப்பா?

மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களும் கேரளாவின் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலும் நடந்து முடிந்திருக்கின்றன. மூன்றுமே தேசிய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்களாகப் பார்க்கப்பட்டன. இவைதவிர 14 மாநிலங்களில் 48 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!