Home » Archives for November 2024

இதழ் தொகுப்பு November 2024

சலம் நாள்தோறும்

சலம் – 60

60. சரம் வாழ்நாளில் அப்படியொரு விருந்துணவை அருந்தியதில்லை. வேறு வேறு பக்குவங்களில் சமைக்கப்பட்ட கறி வகைகளும் எங்கெங்கிருந்தோ தருவிக்கப்பட்ட ருசி மிகுந்த கனி ரகங்களும் பசும்பாலில் சவ்வரிசியையும் நெய்யையும் சேர்த்து வேகவிட்டு, மது சேர்த்துப் பரிமாறப்பட்ட புரோடாஷ் என்கிற பானமும் சோமத்தையும் தயிரையும்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 60

60. வந்தே மாதரம் காந்திக்கு YMCA நடத்திய பாராட்டுக் கூட்டம், பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய புகழ் பெற்ற ‘வந்தே மாதரம்’ பாடலுடன் தொடங்கியது. ‘வந்தே மாதரம்’ (தாயே, உங்களை வணங்குகிறேன்) என்பது காந்திக்கு மிகவும் பிடித்த வரி. தான் எழுதிய பல கடிதங்களின் கீழ்ப்பகுதியில் அவர்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 59

59. தேசத் தந்தை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரிசையாகப் பல கூட்டங்களில் கலந்துகொண்ட காந்திக்கும் கஸ்தூரிபா-வுக்கும் திங்கட்கிழமை சிறிது ஓய்வு. அன்றைக்கு, வழக்கறிஞரும் விடுதலைப் போராட்ட வீரருமான எஸ். சீனிவாச ஐயங்கார் அவர்களுக்கு விருந்தளித்தார். அப்போது சீனிவாச ஐயங்கார் மயிலாப்பூர் ‘லஸ்’...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 59

59. தாய் தெய்வங்களினும் ஒரு மனிதன் உயர்ந்தவனாக இருப்பான் என்று நான் எண்ணிப் பார்த்ததில்லை. அப்படி எனக்குத் தோன்றுவது ஒரு பெரும் பாவமாகவும் இருக்கலாம். தெய்வங்களின் உலகில் பிழைகளும் பிசிறுகளும் மிகுந்தோர் யாருமில்லை. பாவம் புரிந்தவர்கள் தெய்வமாக இயலாது. தெய்வமான பின்பு பாவத்தின் நிழலும் நினைவில்...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 58

58. சோர்வின்றி உழையுங்கள் காந்தி சென்னைக்கு வந்தது ஏப்ரல் மாதத்தில், அதாவது, கோடை வெப்பத்தைப்பற்றி எல்லாரும் புலம்புகிற நேரத்தில். ஆனால், காந்தியைச் சென்னை வெய்யில் அவ்வளவாகப் பாதிக்கவில்லை. தன்னுடைய உறவினரான நரன்தாஸ் காந்திக்கு எழுதிய கடிதத்தில், ‘இங்கு எல்லாரும் வெய்யிலைப்பற்றி ரொம்ப...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 58

58. சாட்சி பூதம் தினமும் துயிலெழுந்ததும் நதியைப் பார்க்கிறேன். சரஸ்வதி மாறவில்லை. அதன் ஆழமோ அடர்த்தியோ அலையடிப்போ சுருதியோ மாற்றம் கண்டதாகப் புலப்பட்டதில்லை. நதியினின்று பார்வையை உயர்த்தி வானைப் பார்க்கிறேன். அதுவும் மாறவில்லை. மித்ரன் மாறாதிருக்கிறான். வருணன் தனது கர்த்தவ்யம் தவறுவதில்லை...

Read More
காந்தி நாள்தோறும்

எம். கே. காந்தி, மூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு – 57

57. பிரிட்டிஷ் பேரரசை வாழ்த்துகிறேன் ‘மெட்ராஸ் மகாஜன சபை’ (MMS, Madras Mahajana Sabha) என்பது 1884ல் தொடங்கப்பட்ட சமூக சேவை அமைப்பு. அப்போது ‘மெட்ராஸ் பிரெசிடென்ஸி’ என்று அழைக்கப்பட்ட மிகப் பெரிய நிலப்பரப்பில் இயங்கிவந்த பல்வேறு அமைப்புகளுடைய பணிகளைத் தொகுப்பதும், மக்களுக்கு...

Read More
சலம் நாள்தோறும்

சலம் – 57

57. நாமகரணம் மூன்றடி இடைவெளியில் அவனுக்கு எதிரே அமர்ந்திருந்தேன். அவனது உயரம் என்னைச் சிறிது கலைத்துக் கலைத்து ஆடிக்கொண்டிருந்தது. இயல்பில் நான் கட்டுமஸ்தான தோற்றத்தில்தான் இருப்பேன் என்றாலும் வளர்ந்துகொண்டிருந்த காலத்தில் யாரோ உச்சந்தலையில் கையை வைத்து அழுத்தி, நிறுத்தினாற்போலக் காட்சியளிப்பதாக...

Read More
நம் குரல்

குளத்தங்கரை நாகரிகம்

சென்னை நகரின் தீராப் பிரச்னைகளுள் முதன்மையானது, வடிகால் வழித் தடங்கள். மழைக்காலங்களில் பெரும்பாலான பகுதிகள் தாற்காலிக நீர்த்தேக்கங்களாகிவிடுவது வழக்கம். கடந்த சில வருடங்களாகச் சில பராமரிப்புப் பணிகளும் தற்காப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாலும் சிக்கல் முழுமையாகச் சரியாக...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 128

128 பத்து ஷங்கர் ராமன் வீட்டுப் பச்சை நிற இரட்டை மரக்கதவின் மேல்பகுதியில் மெல்லிய இரும்புக்கம்பிகள் பொருத்தப்பட்டிருக்கும். ஆளே ஒல்லி என்பதால் இவன் கைகளும் மெலிதானவை; விரல்களும் நீளம். எனவே, இவனே கைவிட்டுத் தாளிடப்பட்டிருக்கும் கதவைத் திறந்துவிடுவான். காலிங் பெல் அடித்தாலும் டிவி...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!