மகாராஷ்டிர மாநில சட்டசபைக்கான தேர்தல் நவம்பர் 20ஆம் தேதி நடக்கவிருக்கிறது. சுமார் பத்து கோடி வாக்காளர்கள் பங்குபெறும் இந்தத் தேர்தலில் நவம்பர் 23ஆம் தேதி யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்பது தெரிந்துவிடும். இறுதிக்கட்டக் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்யப்போகும் கடைசி...
இதழ் தொகுப்பு November 2024
அமெரிக்கத் தேர்தல் கல்யாணம் தாலி கட்டும் கட்டத்தைத் தொட்டுவிட்டது. 700 இலட்சம் மக்கள் வாக்குப் பதிவு செய்துவிட்டனர். மக்களாட்சியில் ஒருவர் வெற்றியும் மற்றவர் தோல்வியும் பெறுவார். தோற்றவர் அன்றே தன் தோல்வியை ஒப்புக்கொள்வதோடு அமெரிக்கத் தேர்தல் முடிந்துவிடும். ஆனால், 2020இல் எப்போது முன்னாள் அதிபர்...
மனித உடலின் திறனுக்கு ஓர் அளவு உண்டு. உதாரணமாக ஒரு பொருளைத் தூக்கிக் கொண்டு நடக்க வேண்டுமானால் அப்பொருளின் எடையும் அதன் அளவையும் பொறுத்தே நம்மால் அக்காரியத்தைச் செய்ய முடியும். அத்துடன் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட உடல்வாகையும் பொறுத்து அவர்களால் தூக்கிச் செல்லக் கூடிய பொருளின் எடையும் அளவும் மாறுபடும்...
பிரபல பிரிட்டிஷ் நடிகர் இட்ரிஸ் எல்பா ஆப்பிரிக்காவிற்குச் சென்று இனிமேல் வாழ்க்கையை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். ஓய்வெடுக்க அல்ல, திரைப்பட நகரை உருவாக்கப் போகிறார். கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள சியாரா லியோன் நாட்டை சேர்ந்த தந்தைக்கும், அதே கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள கானா நாட்டை சென்ற தாய்க்கும்...
காஷ்மீரில், மொத்தமுள்ள 90 இடங்களில் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி 49 இடங்களை கைபற்றி ஆட்சி அமைத்துள்ளது. ஓமர் அப்துல்லா முதல் அமைச்சர். காஷ்மீரில் பத்து வருட இடைவெளிக்குப் பிறகான தேர்தல் இது. அதுவும் 2019 ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 360 ரத்து செய்யப்பட்டு, ஜம்மு – காஷ்மீர் மற்றும் லாடக் என இரண்டு...
தீபாவளியையும் தலைநகர் தில்லியில் காற்று மாசுபடுதலையும் பிரிக்க முடியாது. இந்த ஆண்டு, தீபாவளியன்றும் அதற்கு அடுத்த நாளும் தில்லியின் காற்று தரக் குறியீடு (AQI) சில இடங்களில் நாநூறுக்கும் அருகில் வந்து விட்டது. அதிகபட்சமாக 446 என்ற நிலையை எட்டியது. முக்கிய இடங்களில் தெரிவுநிலை (VISIBILITY) பத்து...
செம்பருத்தி எழுத்துரு உருவாக்கத்தில் அழகான எழுத்துகளை வடிவமைப்பது ஒரு பாதி வேலை. அதைக் கணினியில் பயன்படுத்தும் விதத்தில் மாற்றுவது மறு பாதி வேலை. எழுத்துரு வடிவமைப்பாளர், எழுத்துருப் பொறியாளர் என்று இரு வேறு வேலைகள் இவை. இன்னும் சில நுட்பமான வேலைகளும் இத்துறையில் உள்ளன. அது பற்றிய விழிப்புணர்வு...
129. கை கொடுத்த கோவா ஏற்கனவே இரண்டு பொதுத் தேர்தல்களையும், அதனோடு கூட மாநில சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்களையும் நடத்திய அனுபவம் பெற்றிருந்தது தேர்தல் கமிஷன். அதன் பயனாக, மூன்றாவது பொதுத்தேர்தலை எதிர்கொள்வது அதற்கு சுலபமாகத்தான் இருந்தது. இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையாளராக இருந்த சுகுமார் சென்...
30. ஒன்றானது ஆதியிலே பிரம்மம் இருந்தது. அதைத் தவிர வேறொன்றுமில்லை. பிரம்மத்திலிருந்து பிரபஞ்சம் தோன்றியது. பிரபஞ்சத்தில் பூமியும் இருந்தது. நீரும் நிலமும் கலந்த பூமியில் உயிரினங்கள் தோன்றின. தாவரங்கள் தோன்றின. பிறகு குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான். அவனுக்கு ஆறாவது அறிவு தோன்றியது. அவன்...
ஒரு கற்பனைக் கதாபாத்திரத்துக்கு பாஸ்போர்ட் கொடுத்திருக்கிறது பிரிட்டன். இம்மாதிரியான சுவாரசியங்களெல்லாம் இக்காலத்தில்தான் நடக்கும். பாஸ்டுசோ (Pastuso) என்ற கற்பனை கதாபாத்திரத்தின் பூர்வீகம் பெரு. நிலநடுக்கத்தால் எல்லாம் இழந்த பாவப்பட்ட ஜென்மம். அத்தைதான் ஒரே துணை. அத்தைக்கும் வயதாகிவிட்டது. எனவே...