Home » Archives for February 2025 » Page 5

இதழ் தொகுப்பு 2 months ago

உலகம்

குடியேற வழியில்லாக் குழந்தைகள்

அமெரிக்காவுக்குப் பலவகை கடவுச்சீட்டுகளில் வருபவர்கள் முறையாகப் பணி செய்து அரசுக்கு வருமான வரி செலுத்தி வாழ்பவர்கள் உண்டு. அவர்கள் குழந்தைகள் இங்கே அரசால் பெறும் சலுகைகள் குறித்து அரசாங்கத்துக்கோ மக்களுக்கோ எந்தக் குறையும் இல்லை. ஆனால், சட்டவிதிகளை மீறி அமெரிக்காவில் நுழையும் மக்கள், கடவுச்சீட்டுக்...

Read More
சுற்றுச்சூழல்

கந்தையானாலும் கசக்காமல் கட்டு!

துணி துவைப்பதற்குப் போகும் நேரத்தை விட, சலவை இயந்திரத்தினுள் தொலைந்து போன ஒற்றைக் காலுறையைத் தேடுவதற்கு அதிக நேரம் செலவாகும். அது கடைசி வரை கிடைக்காமலே போகவும் வாய்ப்புண்டு. எதற்காக சாக்ஸையெல்லாம் மெஷினில் போட வேண்டும். கையால் அலசினால் கை தேய்ந்தா போய்விடும் என்பார்கள், பெரியவர்கள். ஆனால்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 5

5 இரவு அதுவரை அவன் மெட்ராஸில் போயிருந்த அதிகபட்சத் தூரம், வடக்கே தண்டையார்பேட்டை மணிக்கூண்டு – கல்லூரிக் காலத்தில் த. இராமலிங்கம் வீட்டைத் தேடிக்கொண்டு போனது. தெற்கே கூடுவாஞ்சேரி – பரீக்‌ஷாவில் இருக்கையில் போலீஸ் உளவாளியாக இருக்கலாம் என்று ஞாநி சந்தேகப்பட்ட சத்யனிடம் அடுத்த நாள்...

Read More
இந்தியா

நேற்றுவரை டெல்லி; இனி இந்திரப்ரஸ்தம்

கால் நூற்றாண்டுக்குப் பிறகு டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது பாஜக. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 48 இடங்களில் வென்றிருக்கிறது. இனி இரட்டை இஞ்ஜின் ஆட்சி மூலமாக டெல்லி சொர்க்கபுரியாகும் என அந்தக் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் அவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களும் நம்பத்...

Read More
சண்டைக் களம் தொடரும்

சண்டைக் களம் – 14

ii. குங்ஃபூ ‘மனித உழைப்பு’ என்பது குங்ஃபூவுக்கு இணையான தமிழ்ச்சொல். நகைச்சுவையாகச் சொல்வதென்றால், சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவி நிற்பது உணவு வகையில் ஃப்ரைடு ரைசும் சண்டைக்கலையில் குங்ஃபூவும். போதிதர்மர் சீனாவுக்குச் சென்று ஷாவோலின் குங்ஃபூவைக் கற்றுக்கொடுத்த வரலாற்றுக்கு முன்பும்...

Read More
தமிழர் உலகம்

செந்தேன் மலரே, ஜெர்மனியே!

ஜெர்மனியின் ஹம்பர்க் பல்கலைக்கழகத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு தமிழ் இலக்கியம் சார்ந்து மிக முக்கியமான பணி ஒன்று தொடங்கப்பட்டது. அடுத்த இரு தசாப்தங்களுக்கு, அதாவது 2047ஆம் ஆண்டு வரை திட்டமிடப்பட்டுள்ள இந்த நெடும் பணியில் சங்க இலக்கியங்கள் மின்னணு மயமாக்கப்படவுள்ளன. அதோடு அவை மொழி பெயர்க்கப்பட்டுப் பிற...

Read More
உலகம்

இலங்கை: அடங்கியிருக்கும் இனவாதம்

நம்புவதற்குச் சற்றுக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். ஒரு பாரம்பரிய வழக்கம், தொன்று தொட்டுத் தொடர்ந்த ஒரு கலாசாரம் அத்தனை சீக்கிரத்தில் எப்படிக் காணாமல் போனது என்று புருவம் உயர்த்துவதைத் தவிர வேறு வழி இல்லை. ஆம். ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலில்...

Read More
உலகம்

பாட்டில் பூதம்

‘உன் நண்பனைக் காட்டு, நீ யாரென்று சொல்கிறேன்’ என்பது டிஜிட்டல் உலகிலும் செல்லுமா என்பது தெரியவில்லை. ‘நெகிழி (பிளாஸ்டிக்) பாட்டிலைக் காட்டு. எந்த நாட்டில் இது தயாரிக்கப்பட்டதென்று சொல்கிறேன்.’ என்று சவால் விடத் தயாராக இருக்கின்றனர் கடல் உயிரியலாளர்கள். இங்கிலிஷ் கால்வாயில்...

Read More
உலகம்

மீண்டும் வன்முறை; மீளுமா வங்கதேசம்?

இந்தியாவும் பங்களாதேஷும் தத்தமது நாட்டில் இருக்கும் தூதரக அதிகாரிகளைக் கூப்பிட்டு மாறி மாறி அதிருப்தி தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். முஜிபுர் ரஹ்மான் நினைவு இல்லத்தை இடித்து நொறுக்கி, ஆரம்பித்த இடத்திலேயே இருக்கிறோம் எனச் சொல்லாமல் சொல்கிறது பங்களாதேஷ். வன்முறை எதனால் ஆரம்பித்தது என்று...

Read More
உலகம்

இங்கே சிறைச்சாலை வாடகைக்குக் கிடைக்கும்

கேரள மாநிலத்தைப் பாதியாக வெட்டியெடுத்தால் கூட எல் சால்வடோரை விடச் சற்று பெரியதாக இருக்கும். பத்து வருடங்களுக்கு முன்னர் இந்தச் சிறிய நாடு உலகின் குற்றவாளிகளின் தலைநகரம் என்றும், உலகின் பயங்கரவாத நாடுகளில் ஒன்று என்றும் அழைக்கப்பட்டது. இன்று தங்கள் நாட்டை சுத்தமாக்கிவிட்டு, வெளிநாட்டுக் குற்றவாளிகளை...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!