Home » தொண்டர் குலம் – புதிய தொடர்
வெள்ளித்திரை

தொண்டர் குலம் – புதிய தொடர்

தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராகப் பணி புரிவோருக்கு வழி காட்டும் புதிய தொடர். நூற்றுக் கணக்கான உதவி இயக்குநர்களின் அனுபவங்களில் இருந்து தொகுக்கப்படுகிறது.

1. கனவுகளால் நெய்யப்படுபவர்கள்

விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் பார்த்திருப்பீர்கள். அதில் சிம்பு தனது தந்தையிடம் தனது லட்சியத்தைப் பற்றிப் பேசுகிற ஒரு காட்சி வரும். வீதியில் வைத்துச் சொல்லுவார். தனது திரைக் கனவுகள் பற்றி. அதற்குச் செய்துகொண்டிருக்கும் ஆயத்தங்கள் பற்றி. எழுதி வைத்திருக்கும் கதைகள் பற்றி. அதுவல்ல முக்கியம். அவர் சொல்லி முடிக்கும்போது அந்த அப்பா கதாபாத்திரத்தின் முகத்தில் ஒரு மாறுதல் வரும் பாருங்கள். அது அதிர்ச்சியா, வெறுப்பா, அருவருப்பா, ஏமாற்றமா என்று சட்டென்று இனம் காண முடியாத ஒரு பாவனை. கணப் பொழுது முக மாற்றம்தான். ஆனால் இது உதவாது, வேலைக்கு ஆகாது, எனக்குப் பிடிக்கவில்லை என்று நீளமாகப் பேச வேண்டியதை அந்த ஒரு முகச் சுளிப்பில் சொல்லிவிடுவார்.

சினிமாக் கனவை சினிமாவில் வெளிப்படுத்தும் கதாபாத்திரம் எப்படியாவது முட்டி மோதி லட்சியத்தில் ஜெயித்துவிடும். நிஜத்தில் அது அவ்வளவு எளிதல்ல.

அதுவும் வறுமைக்கோட்டில் நைந்த கயிறு கட்டி ஊஞ்சலாடும் பொருளாதார நிலையைக் கொண்ட பெற்றோருக்குத் தனது மகன் இப்படி ஒரு கனவை வெளிப்படுத்தினால் வயிற்றில் புளியுடன் சேர்த்து வேறு சிலவற்றையும் கரைக்கும். அதையே ஒரு பெண் பிள்ளை சொல்கிறது என்றால் வேறு வினையே வேண்டாம். தகப்பனோ, தாயோ நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே விழ நிறைய வாய்ப்புண்டு.

நான் ஒருத்தியை விரும்புகிறேன் அல்லது நான் ஒருவனைக் காதலிக்கிறேன் என்று வீட்டில் சொல்லும்போது உருவாகும் கலவரக் காட்சியினும் வீரியம் மிக்கதாக அது இருக்கும்.

இத்தனைக்கும் தனது கனவை, லட்சியத்தை வீட்டில் தெரியப்படுத்துவதற்கு முன் சம்பந்தப்பட்ட பையனோ பெண்ணோ மனத்துக்குள் ஒரு கோடி ஒத்திகை பார்த்திருப்பார்கள். சரியான சொற்களைத் தேர்ந்தெடுத்துத்தான் வெளிப்படுத்துவார்கள். ஆனாலும் கலவரம். ஆனாலும் எதிர்ப்பு. அங்கேயே குழி தோண்டி ஆசைக்கு அடக்க விழா நடத்திவிட அனைத்து ஆயத்தங்களும் உடனே செய்யப்படும்.

பெற்றோர்தான் அப்படியா என்றால் கிடையாது. உற்ற நண்பர்களே சங்கு வாத்தியம் வாசிக்க ஆயத்தமாகிவிடுவார்கள்…

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



இந்த இதழில்

error: Content is protected !!