காப்பி உற்பத்தியில் உலகின் முதல் பத்து இடங்களில் வருகிறது இந்தியா. இந்தியாவில் உள்ள காப்பி உற்பத்தியளர்களுள் தமிழ்நாட்டைச் சேர்ந்த கண்ணன் ஜூபிலி காப்பி நிறுவனத்தினர் மிகவும் பிரபலம். இதன் இயக்குநர், சங்கர் கிருஷ்ணனைச் சந்தித்தோம்.
‘தமிழ்நாட்டில், கோவை அன்னபூர்ணாவைத் தவிர வேறு எந்த உணவகத்துக்கும் செல்லுங்கள். அங்கே ஒரு காப்பி ஆர்டர் செய்தால், வருவது கண்ணன் காப்பியாகத்தான் இருக்கும்’ என்கிறார் இவர். கண்ணன் ஜூப்லி காப்பி என்கிற நிறுவனம் தோன்றி வளர்ந்து வென்றது எப்படி என்று விவரிக்கிறார்:
‘நேற்றுத் தான் எங்களது எழுபதியோராவது கிளை திருப்பூரில் தொடங்கப்பட்டது. அடுத்தது, பாண்டிச்சேரியில் திறக்கப்படுகிறது. இந்தியாவில் மட்டுமில்லாமல் துபாய், சிங்கப்பூர், மலேசியா, மொரிஷியஸ் போன்ற பல நாடுகளில் எங்களின் கிளைகள் உள்ளன. இதற்கெல்லாம் அஸ்திவாரம் இட்டது என் தாத்தா.
கோவை இரயில் நிலையத்தின் முன்புறம் என் தாத்தா சின்னதாக ஒரு கடை வைத்திருந்தார். 1971 இல் என் தந்தை அதை எடுத்து நடத்த ஆரம்பித்தார். அப்போது கண்ணன் காப்பி என்பதுதான் கடையின் பெயர். தாத்தாவின் மூத்த மகன் – அதாவது என் பெரியப்பாவின் பெயர் கண்ணன். அவரது பெயரில் ஆரம்பிக்கப்பட்டதுதான் கண்ணன் காப்பி. அதில் என் தந்தை ஜெயக்குமாரின் பெயரும் வரவேண்டும் என்று எண்ணி, அதன் முதல் எழுத்து ‘ஜெ’ வருகிற மாதிரி அமைத்து, கண்ணன் ஜூபிலி காபி கம்பெனி என்று பெயர் வைத்தார்.
அப்பா கடை ஆரம்பித்த புதிது. அப்பவே தொழிலை விட்டு விட்டுப் போகிற அளவுக்குக் கடும் சிக்கல்..
உங்கள் எண்ணம்