Home » உருளைக் கிழங்கு படுகொலை வழக்கு
உணவு

உருளைக் கிழங்கு படுகொலை வழக்கு

ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமாகச் சாப்பிடும். உண்ணும் ரகங்கள் மட்டுமல்ல; உணவு நேரம்கூட மாறத்தான் செய்யும். பொதுவாக நாம் இரவு உணவை எட்டு மணி முதல் ஒன்பது ஒன்பதரைக்குள் எடுத்துக்கொள்வோம் அல்லவா? அமெரிக்கர்களுக்கு இரவு உணவு என்பது மாலை ஐந்து மணி முதல் ஏழரைக்குள் முடிய வேண்டியது. இது காலகாலமாக இருந்து வரும் வழக்கம்.

வெள்ளி, சனிக்கிழமைகளில் சிறிது விசேடமாக இருக்கும். சரக்குடன் கூடிய இரவு உணவு. விடிய விடியக் கொண்டாட்டங்கள், அழிச்சாட்டியங்கள் எல்லாம் இருக்கும். கொண்டாடக் கிடைக்கும் நாள்களை அவர்கள் தவற விடுவதே இல்லை.

அது இருக்கட்டும். அமெரிக்காவில் டின்னர் இரண்டு வகை. வீட்டு சமையல், மற்றும் ஹோட்டல் உணவு. இங்கும் அப்படித்தானே என்று உடனே தோன்றலாம். ஆனால் அமெரிக்காவில் வீட்டில் சமைத்து டின்னர் சாப்பிடுபவர்கள் அபூர்வம். பெரும்பாலும் ஓட்டல்தான். ஓட்டல் வகையிலும் துரித வகை உணவுகளை Drive Through மூலம் எடுத்துக் கொள்வோர் ஒரு வகை. உணவகங்களில் நேரில் சென்று உணவருந்துவோர் மற்றொரு வகை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



இந்த இதழில்

error: Content is protected !!