Home » சுறா சூப் களேபரங்கள்
உணவு

சுறா சூப் களேபரங்கள்

சீனா, ஹாங்காங், வியட்நாம், கொரியாவைச் சேர்ந்தவர்கள் பாம்பு, பல்லி, அரணை, பூரான், தேள், கரப்பான் பூச்சி என்று எதையும் விட்டு வைக்கமாட்டார்கள் என்பது உலகறிந்த ரகசியம். இதெல்லாம் ஒன்றுமே இல்லை. இந்தப் பிராந்தியத்தில் சுறா துடுப்பு சூப் (Shark fin Soup) என்று ஒரு ரகம் சக்கைப் போடு போடுகிறது. இந்த சூப்பின் விலை ஒரு கிண்ணம் 150 டாலர். அதாவது ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.10,500. ஒரு கிலோ சுறா துடுப்பு இறைச்சி இன்று இரண்டரை லட்சம் ரூபாய். அப்படியென்ன இதில் சிறப்பு?

சுறாக்களில் பல ரகம் உண்டு. 22 சென்டிமீட்டர் நீளமுள்ள பிக்மி சுறா முதல் 12 மீட்டர் நீளம் உள்ள திமிங்கில சுறா வரை எண்ணிக் கணக்கெடுத்தால் மொத்தம் 440 ரகம். இவற்றில் சுமார் முப்பது வகைச் சுறாக்கள் மட்டுமே மனிதர்களைத் தாக்கும். கப்பல்களைக் கவிழ்க்கும். மற்ற எல்லாமே கசாப்புக்குச் செல்பவைதான்.

சுறாவும் உணவுதான் என்று முதல் முதலில் ஆரம்பித்தவர்கள், சீனர்களே. சுறாக்களுக்குப் பொதுவாக எட்டு துடுப்புகள் (fins) இருக்கும். அதை மட்டும் அறுத்து எடுத்துக்கொண்டு உடலை அவர்கள் கடலிலேயே வீசி விடுவார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!