Home » கோளாறு எங்கே இருக்கிறது?
நம் குரல்

கோளாறு எங்கே இருக்கிறது?

சிலுவைப் போரைச் சித்திரிக்கும் பண்டைய ஓவியம்

“மதம் எப்பொழுதும் அரைகுறையானதுதான். மதம் என்பது மாறாமல் கடைப்பிடிக்கப்படும் சடங்கு நிறைந்த சம்பிரதாய வழிபாடாகவும், நிலைத்த சமயக் கொள்கைகளாகவும் சீரழிந்து விடுகிறது.

மதம் என்பது உண்மையில் அறிவுமன்று.

நாம் என்ன செய்கிறோம்? ஒரு மதத்தின் சில உண்மைகளையும் சின்னங்களையும் அல்லது குறிப்பிட்ட விதமான ஒழுங்கையும் மிகக் கண்டிப்பான சமயக் கொள்கைகளாக மாற்றி விடுகிறோம். இது, நாம் இன்னமும் கூட ஆன்மிக அறிவில் சிறு குழந்தைகளாகத்தான் இருக்கிறோம் என்பதையும் எல்லையற்ற பரம்பொருளின் விஞ்ஞானத்திலிருந்து வெகு தூரத்திலிருக்கிறோம் என்பதையும்தான் காட்டுகிறது. புனிதத் தலங்களுக்கு யாத்திரை செல்வதுகூட, உண்மையைக் கண்டடைய உதவாது. அது சாதாரண மக்களுக்கான ஒரு சமயப் பயிற்சி மட்டும்தான்” என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.

சமயம் என்பது ஆன்மிகத்தின் பயிற்சிக் களம். அங்கே ஆன்மிகப் பயிற்சி மட்டும் நடந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. இப்போதெல்லாம் ஆன்மிகப் பயிற்சியைவிட குஸ்திப் பயிற்சிதான் அதிகம் நடப்பதுபோல் தோன்றுகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



இந்த இதழில்

error: Content is protected !!