சபை சற்று முன்னதாகவே தொடங்கிவிட்டது. வெகு நாள்கள் கழித்து ராணியின் ஆஸ்தான வித்வான் அங்கு இசைக்க வருகிறார் என்ற ஆவல் மிகுதியால் தாயின் வடிவமாகவும் ராஜமாதாவின் வடிவமாகவும், விஜயவாடாவின் கண் கண்ட தெய்வமாகவும் வீற்றிருக்கும் கனக துர்க்கையின் கோயில் வளாகமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
தாமாக வந்து செவி புகுந்த மங்கல இசையைக் கேட்டுக் கொண்டே, நம் காலில்தான் நடக்கிறோமா அல்லது ஏதோ ஒரு சக்தி நம்மை உந்தித் தள்ளுகிறதா என்றுகூடத் தெரியாமல் சாரிசாரியாக கும்பல் கோயிலுள் பிரவேசித்துக்கொண்டிருந்தது. ஒரு எறும்பு கூட விடாமல் படி அளக்கும் ஈசனின் பத்தினி, வரும் அனைவருக்கும் அமர ஓரிடம் கொடுக்காமலா போய்விடுவாள்?
Add Comment