உலகின் மூன்றாவது பெரிய இராணுவம் நம்முடையது. அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்திய இராணுவமே அளவில் பெரிது.
இமயமலையின் மீதுள்ள சியாச்சின் பகுதி, கடல் மட்டத்திலிருந்து இருபதாயிரம் அடி உயரத்திற்கும் மேலிருக்கிறது. எலும்பையும் உறைய வைக்கும் மைனஸ் நாற்பத்தைந்து டிகிரி செல்சியஸ். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நமது இராணுவ வீரர்கள், எதிரிகளை எதிர்த்துப் போரிடுவதைவிட இயற்கையை எதிர்த்துத்தான் அதிகம் போராட வேண்டியிருக்கிறது. இந்தப் போராட்டத்தில், மாதம் ஒரு வீரராவது பனிச் சரிவில் சிக்கி மரணமடையும் அவல நிலைதான் இன்றும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
பனிச் சரிவில் சிக்கிய அந்த உண்மையான வீரன், உயிர் போகும் அந்தத் தருவாயில் என்ன நினைப்பான்? ‘ஐயோ, போர்க் களத்தில் எதிரிகளைப் பந்தாடிப் பந்தாடி மகிழ்கின்ற அந்தப் பேரின்ப நேரத்தில் வீர மரணமடையாமல், இப்படி பனிச் சரிவில் சிக்கி விபத்தில் மடிகிறோமே’ என சுய அவமானத்தில் மனமுடைந்து போகமாட்டானா? அதை நம்மால் எப்படி ஈடுகட்ட முடியும்? அவன் குடும்பத்திற்குத்தான் நம்மால் எப்படி ஆறுதல் சொல்ல முடியும்?
இங்கே, ஒக்கூர் மாசாத்தியார் என்ற புலவர் எழுதிய புறநானூற்றுப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.
Add Comment