கலைகளில் ஈடுபாடு கொண்டு நேரம் மறந்து ஊறித் திளைப்பதில் தமிழனை விஞ்ச ஆள் கிடையாது. இன்று ஓடிடி சீரிஸ்கள் என்றால் நேற்று திரைப்படங்கள். தொலைக்காட்சி. அதற்கு முன் மேடை நாடகங்கள். வானொலி. இன்னும் முன்னால் தெருக் கூத்து. அவரவர் தேர்வு, அவரவர் ரசனைதான். ஆனால் கலையார்வம் இல்லாத தமிழர்கள் அநேகமாகக் கிடையாது.
இந்தக் கலைத் தாகம் எங்கிருந்து தொடங்கியிருக்கலாம்?
தமிழகத்தின் ஆதி தெய்வமான சிவன், கூத்தன்தான். தமிழ் மொழியே இயலோடு இசையும் நாடகமும் கலந்த ஒன்றுதான். எனவே தற்காலத் தமிழர்களின் கலைத் தொற்று கூத்திலிருந்தும் பாட்டிலிருந்துமே வந்ததில் வியப்பில்லை.
இன்றைய திரைப்படம், நாடகம், நடனம் போன்ற அனைத்தும் கூத்தில் ஒன்றாக இயைந்திருந்தவை. நாடகம் என்ற சொல் தொல்காப்பியத்திலேயே ஆளப்பட்டிருப்பது…
Add Comment