திரையரங்குகளே தமிழ் நாட்டின் தலை சிறந்த பொழுதுபோக்குக் கூடங்களாக இருந்த காலம் இன்று இல்லை. புதுப் படக் கொண்டாட்டம், முதல் நாள் தடபுடல்கள், ப்ளாக்கில் டிக்கெட் வாங்கிப் பார்க்கிற வெறி, திரும்பத் திரும்பப் பார்த்துவிட்டுப் பெருமையாகப் பேசி மாய்வது – இதெல்லாம் காலாவதி ஆகிவிடவில்லையே தவிர முன்னளவுக்கு நிச்சயம் இல்லை.
தூர்தர்ஷனின் தொடக்கம், தனியார் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் என்று ஒவ்வொன்றாக வர வர, திரைப்படங்களை தியேட்டருக்குச் சென்று பார்ப்பது அப்போதே குறையத்தான் ஆரம்பித்தது. கேபிள் டிவி சந்தா கட்டினால் போதும்; தனியார் சானல்கள் போக, ஊர் உறங்கும் நேரத்தில் அவனே திருட்டுத்தனமாகப் புதிய படங்களையும் வெளியிட்டுவிடுவான் என்றொரு காலம் இருந்தது. லோக்கல் கேபிள் மவுசுடன் இருந்த சமயம் அது.
பிறகு தனியார் சானல்களே புதிய படங்களை உடனுக்குடன் வெளியிடத் தொடங்கின. திரைக்கே வராத படங்கள் என்ற அறிவிப்புடன் டிவியிலேயே ரிலீஸ் செய்யத் தொடங்கினார்கள். உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்றார்கள். இன்னும் என்னென்னவோ.
இதுதான்; இவ்வளவுதான் என்று அப்போது நினைத்தோம். ஆனால் இல்லை…
தலைப்பே அருமை.OTT குறித்த அலசல் சிறப்பு.தேனை ருசித்தாயிற்று.நாளைய முருங்கைமரம் எதுவோ பார்ப்போம்.
அருமை.
Ott யில் வெளியிடப்படும் படங்களில் பச்சை பச்சையாய் கெட்ட வார்த்தைகள். படம் தரமாக இருந்தும் இந்த கெட்ட வார்த்க்தை பிரயோகத்தினால் குடும்பத்தோடு பார்க்க முடிவதில்லை. இதற்கும் சென்ஸார் வருமா?