காலை விடியும் போது நமது அனைவரின் கைகளில் இருந்தும் திறன்பேசிகள் பிடுங்கப்பட்டு விட்டால் என்ன ஆவோம்? நினைத்தாலே கலவரமாக இருக்கிறது இல்லையா? இதே கதைதான் கைபேசிகளில் இருக்கும் சமூக ஊடகச் செயலிகள் போன்றவற்றை அழித்து விட்டாலும். இவை இந்தளவு முக்கியத்துவம் அடையக் காரணம், அன்றாட வாழ்வில் நமக்கு அவை செய்யும் உதவிகள். கூகிளைத் தட்டினால் உள்ளூர் வெப்ப நிலை முதல், உக்ரைன் யுத்த நிலவரம் வரை சொல்லி விடும். இத்தகைய மாய உதவிகளின் பின்னணியில் இருப்பது கணினி மற்றும் திறன் பேசிகளுக்கான மென்பொருள்கள். மென்பொருள்கள் பரவலாக வளர்ச்சி பெற்றது கடந்த ஆண்டுகளுக்குள்தான்.
குறுகிய காலத்துக்குள் நமது வாழ்வையே மாற்றிப் போடும் ஆகிருதியாக உருவெடுத்திருக்கும் இம்மென்பொருள்கள் எப்படி உருவாகி வளர்ந்தன?
Add Comment