உலகில் உள்ள பெரும்பாலான தமிழ்ச் சங்கங்களில் சொற்பொழிவாற்றி இருக்கும் ஒரே தமிழ்ப் பேச்சாளர் என்றால் அது சுமதிஶ்ரீதான். அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை எல்லோரும் செல்லும் இடங்களைச் சுற்றி வந்து சொற்பொழிவாற்றுவதில் ஒன்றுமில்லை. ஜாம்பியா, உகாண்டா என்று நாம் மேப்பில் மட்டும் பார்த்திருக்கக் கூடிய தேசங்களுக்கெல்லாம் சென்று வென்று வந்திருக்கிறார். மேடைப் பேச்சை ரசிப்பதெல்லாம் அந்தக் காலம் என்று ஒதுக்கிவிடவே முடியாது. இந்தத் தலைமுறை இளைஞர்களையும் தமது பேச்சாற்றலால் சுண்டி இழுத்து உட்கார வைக்கிறார் சுமதிஶ்ரீ. எப்படிச் சாதித்தார் இந்தத் துறையில்?
‘என் சொந்த ஊர் திருச்சி. என் தாய்க்கு திருச்சிக்குப் பக்கத்து ஊர் என்னவென்றே தெரியாது. என் பாட்டியோ பக்கத்துக் கிராமத்தைக்கூடப் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட பரம்பரையிலிருந்து வந்தவள் இன்று சொற்பொழிவுகளுக்காக உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறேன் என்றால், காரணம் தமிழ். அதுதான் எனக்கு எல்லாம் தந்தது.
நான் முதன் முதலில் மேடையேறியதே ஒரு மறக்க முடியாத சம்பவம்…
Add Comment