ஆன்லைன் விற்பனை என்பது, பெரும்பாலும் மொபைல் செயலிகள் மூலம்தான் நடக்கின்றது. செயலிகளை உருவாக்குபவர்களும் மக்களின் வேகத்திற்கும் தேவைக்கும் தகுந்தாற் போல் புதுசு புதுசாக வசதிகளைச் சொருகிக்கொண்டே இருக்கிறார்கள்.
திறமை, படைப்பாற்றல், திட்டமிடல், கவனம் சிதறாத உழைப்பு போன்றவையே நவீன தொழில் துறையை வழி நடத்துகின்றன. இணைய வர்த்தகத்திற்கு இவை மிக மிக அவசியம்.
ஓர் இணைய வர்த்தகத் தளம் ஒழுங்காக இயங்கப் பல ஆயிரம் பேர் தினமும் வேலை செய்தாக வேண்டும். பல குழுக்கள் இராப்பகலாகச் சுழற்சி முறையில் செயல்பட்டாக வேண்டும். அப்போதுதான் மக்கள் சிரமின்றி ஷாப்பிங் செய்ய முடியும். ஒரு க்ளிக்கில் தாம் வாங்கும் ஒரு பொருளுக்குப் பின்னால் குறைந்தது ஆயிரம் பேரின் உழைப்பு உள்ளது என்பதெல்லாம் மக்களுக்கு அநாவசியம். ஆனால் அது இருந்தால்தான் இது நடக்கும்.
informative Mam. Thanks