தொலைக்காட்சித் தொடர்கள் இல்லத்தரசிகளுக்கானது. கல்லூரிப் பெண்கள் சீரியல் பார்ப்பதில்லை.
இப்படியொரு பிம்பம் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வந்திருக்கிறது. அது எந்த அளவில் உண்மை? பக்கத்து வீட்டுக்காரி ஓசியில் ஒரு சிட்டிகை காபித்தூள் கேட்கிற மாதிரிதான் ஆஷிகாவிடம் கேட்டோம். அவர் 2k கிட். கல்லூரி மாணவி. லேடீஸ் ஹாஸ்டல்வாசி. ஜோடி சேர்க்கச் சொல்லவும் வேண்டுமா?
யார் சொன்னது நாங்க சீரியல் பாக்கிறதில்லைன்னு என்று குயில்போல ஒரு கூவு கூவி, அவரது தோழிகளை எல்லாம் அழைத்து விட்டார். விடுதி அறையில் இடம் கொள்ளாது. ஆகையால் பக்கத்திலிருந்த காபி ஷாப்பில் சங்கமம். அனைவருக்கும் ஒரு காப்பி ஆர்டர் செய்துவிட்டு விஷயத்தை அவரே தனது தோழிகளிடம் எடுத்துச் சொன்னார்.
இன்றைய இளம் பெண்கள் சீரியல் பார்ப்பதில்லையா?
Add Comment