Home » வில்லத்தனம் என்னடி, கண்ணம்மா?
தொலைக்காட்சித் தொடர்கள்

வில்லத்தனம் என்னடி, கண்ணம்மா?

பாரதி கண்ணம்மா வில்லி

சீரியல்களில் கதாநாயகியருக்குச் சமமான அல்லது ஒரு படி மேலான மதிப்பும் மரியாதையும் வில்லிகளுக்கு உண்டு. கதாநாயகி இல்லாமல் ஒரு ஷெட்யூல் முழுவதுமேகூட படப்பிடிப்பு நடத்தி முடித்துவிடலாம். ஆனால் ஒரு எபிசோட்கூட வில்லி இல்லாமல் முடியாது என்பதுதான் உண்மை நிலவரம். இந்த வில்லிகள் வெளியில் இருந்து கொண்டு வில்லத்தனங்கள் செய்வதில்லை. குடும்பத்தில் ஒருவராக மாமியார், மருமகள், நாத்தனார், அக்கா, தங்கை – சில சீரியல்களில் அம்மாவே கூட வில்லியாக இருக்கிறார்கள்.

சீரியல் பார்க்கும் பெண்களிடம் இந்தக் குடும்ப வில்லிகள் வரவேற்பு பெற்றதால் மட்டுமே திரும்பத் திரும்ப எல்லா சீரியல்களிலும் வில்லிகளை உருவாக்குகிறார்கள்.

தமிழ் சீரியலில் முதன்முதலில் அதிக வரவேற்பு பெற்ற வில்லி தெய்வமகள் அண்ணியார். அவருக்குக் கிடைத்த ஆதரவு தொடர்ந்து தமிழ் சீரியலில் பல வில்லிகளை உருவாக்கியிருக்கிறது.

டிவி சீரியல்களில் வரும் வில்லிகளை உண்மையில் பெண்கள் விரும்புகிறார்களா? என்றால் ஏன்? நிஜ வாழ்வில் அவர்களோ அல்லது அவரவர் அம்மா, மாமியார் அப்படி இருந்திருக்கிறார்களா? வில்லிகளை விரும்ப என்ன காரணம்? இந்தக் கேல்விகளுக்குச் சில குடும்பத் தலைவிகளிடமிருந்து சுவாரஸ்யமான பதில்கள் கிடைத்தன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • ஆமாம். வில்லிகள் இல்லாமல் ஒரு குடும்ப சீரியலும் இல்லை. வில்லிகள் நிறைய திட்டங்களை போட்டு.. தொடரை நீட்டிப்பதிலும் பங்கு வகிக்கிறார்கள். அவ்வாறு வில்லிகள் போடும் ‘திட்டங்க’ளை வெல்லும் கதாநாயகிகளில், நிறைய குடும்பங்களின் கதாநாயகிகள் தம்மை ஒப்பீடும் செய்து கொள்கிறார்கள்.. அவ்வாறு உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும் தொடர்கள், குடும்பங்களில் கோலோச்சுகின்றன..

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!