Home » மாஸ்டர்
ஆளுமை

மாஸ்டர்

கிழவனும் கடலும்

டிசம்பர் 13, 2003 அன்று இராக் அதிபர் சதாம் உசேன் Ad-dawr என்ற கிராமத்தில் அமெரிக்கப் படையினரால் ஒரு நிலவறையில் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் கேட்டது ஒரே ஒரு புத்தகத்தை மட்டும்தான். எர்னஸ்ட் ஹெமிங்வேயின் கிழவனும் கடலும்.

கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ தனது காரில் எப்போதும் வைத்திருந்த புத்தகங்களில் ஒன்று அது. தனது மாஸ்டர் என்று அவர் ஹெமிங்வேயைக் குறிப்பிட்டிருக்கிறார்.

சற்றுக் கூர்ந்து கவனித்தால் இதற்குக் காரணம் அகப்படும். மேற்சொன்ன ஆளுமைகளின் வாழ்வைச் சிறிது எண்ணிப் பாருங்கள். ஹெமிங்வேயின் கதை மாந்தர்கள் ஏதாவது ஒரு வகையில் கலகக்காரர்கள். தங்களைப் பிணைத்த தளைகளில் இருந்து விடுவித்துக் கொள்ளும் முனைப்பு கொண்டவர்கள். இருண்ட கானகத்தில் தனியே சிக்கிக்கொண்டு, அங்கிருந்து வெளியேறிவிடப் போராடுபவர்களாக இருப்பார்கள்.

இந்தக் கூறுகளைத் தம் வாழ்வில் கொண்ட புரட்சியாளர்களும் பெருந்தலைவர்களும் இயல்பாக ஹெமிங்வேயிடம் சென்று தஞ்சமடைந்துவிடுவார்கள். காஸ்டிரோவும் சதாமும் மட்டுமல்ல. ஏராளமான உலகத் தலைவர்களின் விருப்பத்துக்குரிய எழுத்தாளராக ஹெமிங்வே இருந்திருக்கிறார். அவரளவு ‘அரசியல்வாதிகளால்’ கொண்டாடப்பட்ட எழுத்தாளர் இன்னொருவர் கிடையாது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!