சாதாரண மனிதர்கள் அதிகம் பயன்படுத்தும் செயலிகளை நாம் அறிவோம். சாதாரணமாக நெருங்க முடியாத அதி உயர் பதவியில் இருப்பவர்களும் மனிதர்களே அல்லவா? அவர்கள் என்னென்ன செயலிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று அறியும் ஆவல் வந்தது. இன்றைய தேதியில் அமெரிக்க அரசின் மிக முக்கியமான பொறுப்புகளில் இருக்கும் சிலரை விசாரித்தோம். உங்கள் போனில் உள்ள ஆப்புகள் யாவை?
இந்த சர்வே, கடந்த சில தினங்களில் சுமார் 120 பேரிடம் மெட்ராஸ் பேப்பருக்காக மேற்கொள்ளப்பட்டது.
முதலில் அவர்கள் திகைத்துவிட்டார்கள். இதைத் தெரிந்துகொண்டு என்ன ஆகப் போகிறது என்கிற திகைப்பு. ஏனெனில், அமெரிக்காவில் ஒவ்வொரு அரசுத் துறையும் பல நூறு செயலிகளை மக்களுக்குத் தொடர்ந்து அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. வேலை வாய்ப்பு நிவாரணம் முதல் வாரா வாரம் பெறும் உதவித் தொகை வரை உடனடித் தகவல்கள் பெற அரசு அலுவலகச் செயலிகள் உள்ளன.
உணவுத் தேவைக்கொன்று, உடற்பயிற்சிக்கு இன்னொன்று, மருத்துவர் பற்றி அறிய ஒன்று, மன நலனுக்கு ஒன்று என எவ்வளவோ. அவற்றைப் பரீட்சித்துப் பார்ப்பது அதிகாரிகள், செயலாளர்களின் கடமையாக இருக்கும். ஆனால் நாம் கேட்பது அதுவா? அவர்களது பிரத்தியேக விருப்பத்துக்குரிய செயலிகள் என்னென்ன?
‘அவர்கள்’ என்று இங்கே குறிப்பிடப்படுபவர்கள் யார் என்பது குறித்த ஒரு குறிப்பு:
Add Comment