7. உப்புமா கம்பெனிகள்
உதவி இயக்குநர்கள் உழைக்கும் வர்க்கமென்றால், தயாரிப்பு நிறுவனங்கள் முதலாளி வர்க்கம்.
சினிமா ஆசையோடு ஊரை விட்டு ஓடிவரும் கூட்டத்தின் ஒரு சிறு பகுதியான உதவி இயக்குநர்களைப் பற்றி மட்டும்தான் நாம் பார்த்து வருகிறோம். ஆனால் இந்தக் கூட்டத்தின் பெரும்பான்மை என்பது வேறு விதமானது.
ஹீரோ ஆகணும், ஹீரோயின் ஆகனும், காமெடியன் ஆகனும் என்று முக்கியக் கதா பாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுபவர்கள் ஒருபுறம் கிளம்புவார்கள்.
“சும்மா ஒரு சீன்ல மூஞ்ச காமிச்சிட்டு அப்டியே கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகி ஒன்னு ரெண்டு டயலாக் பேசனும். அப்டியே அடுத்து அடுத்து போய் வேற லெவலுக்கு வந்துடனும்” என்று கண்களில் வெளிச்சம் மின்னச் சொல்பவர்கள் மறுபுறம் மூட்டை கட்டிக்கொண்டிருப்பார்கள்.
“பேரு புகழ் எல்லாம் எதுவும் வேணாம் சார், சும்மா ஒரு வாட்டி அந்த ஸ்க்ரீன்ல நம்ம மூஞ்சி வந்துட்டா போதும்” என்று பொய் சொல்லி வாய்ப்புத் தேடி நடித்துவிட்டு அப்புறம் ‘வேற லெவல்’க்கு வந்துக்கலாம் என்ற திட்டத்தோடு நடிக்க வாய்ப்புத்தேடி வருவோர் இன்னொரு புறம் இருப்பார்கள்…
Add Comment