நல்லவர் ஒருவர் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைகிறார். தேவையான அனைத்துப் பொருள்களையும் எடுத்துப் பையில் போட்டுக்கொண்டு நேரே வெளியே வந்துவிடுகிறார். பில் கவுண்ட்டர் பக்கம் போகவில்லை. பணமும் செலுத்தவில்லை. நடப்பது இங்கல்ல. அமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில்.
உடனே நமக்கு என்ன தோன்றும்? கொள்ளை. திருட்டு. ஃப்ராடு. பித்தலாட்டம்.
அதுசரி. கடையில் யாரும் இதைக் கவனிக்கவில்லையா? பார்த்தால் அவரைப் போலவே மற்றவர்களும் உள்ளே வந்து தேவையானதை எடுத்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். பணம் செலுத்தும் சடங்கே கிடையாது. அட, ஒரு பில்லிங் கவுண்ட்டர்கூட இல்லாமல் ஒரு சூப்பர் மார்க்கெட்டா?
ஆம். அப்படித்தான். கேஷ் கவுண்ட்டர் கிடையாது. கணக்குப் பிள்ளைகளும் கிடையாது. அது அமேசான் Go கடை. வேண்டியதை எடுத்துக்கோ. போட்டுக்கோ. போய்க்கோ.
Add Comment