இப்போதைய ஊடக விவாதங்களில் பங்கு பெறுவோரை, எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றே புரியவில்லை. விஷயம் தெரிந்தவர்கள் கிடைப்பது அரிதாக இருப்பதாலோ என்னவோ, அரசியல் விமர்சகர்கள் என்றும் மூத்த பத்திரிகையாளர்கள் என்றும் யார் யாரையெல்லாமோ சகட்டுமேனிக்கு அழைத்து வந்து விவாதம் செய்ய வைக்கிறார்கள்.
விளைவு?
பல தவறான தகவல்கள் பதிவிடப்படுகின்றன. அந்தத் தவறுகளைச் சுட்டிக் காட்டித் திருத்துகிற அளவுக்கான ‘நெறியாளர்’களும் மிகக்குறைவு என்பதால், சில சமயங்களில் அந்தத் தவறுகள் களையப்படாமலே போய்விடுகின்றன.
Add Comment