8. சிக்கனம்
மெக்கானிக் ஒருவர் தன்னிடம் கார் பழுதுபார்க்க வந்த இதய அறுவைச் சிகிச்சை நிபுணரைப் பார்த்து “ஏன் சார் நா கார் இஞ்சின்ல பாக்குற அதே ரிப்பேர் வேலைய தான நீங்க மனுஷ இதயத்துக்குப் பண்றீங்க. எனக்கு மட்டும் ஆயிரத்துல சம்பளம்; உங்களுக்கு மட்டும் ஏன் லட்சத்துல சம்பளம்?” என்று கேட்டார்.
அதற்கு அந்த மருத்துவர் “நீ வண்டிய ஆஃப் பண்ணிட்டு இஞ்சின வெளிய எடுத்து எல்லா பார்ட்டையும் தனித்தனியா பிரிச்சிட்டு திரும்ப மாட்டுற. ஆனா நான் ஓடிட்டு இருக்க வண்டிய ஓடிட்டு இருக்கும் போதே இஞ்சின பிரிச்சி ரிப்பேர் பாக்குறேன். அந்த வித்தியாசத்துக்குத்தான் அந்த விலை” என்று பதில் சொன்னார்.
Add Comment