முன்பெல்லாம் மாரத்தான் என்றால் மிகச் சில வீரர்கள் கலந்துகொள்ளும் ஒரு பந்தயம். இன்று உடல் நலனில் அக்கறை உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் முழு மாரத்தான், அரை மாரத்தான் என்று வாரம் தோறும் ஓடுகிறார்கள். உலகமெங்கும் இது நடக்கிறது.
ஆனால் மாரத்தான் ஓடுவது அவ்வளவு எளிதல்ல. தம் கட்டி மணிக் கணக்கில் ஓடுவதற்கு உடல் வலு முக்கியம். ஃபுல் ப்ளேட் பொங்கல் வடை பூரி கிழங்கு அடித்துவிட்டு ஓட முடியாது. இதற்கென்று ஓர் உணவு ஒழுக்கம் உண்டு. அதைத்தான் மாரத்தான் டயட் என்பார்கள்.
நான் இருபது ஆண்டுகளாக ஐம்பதாயிரம் கிலோ மீட்டருக்கு மேல் ஓடியவன். நூற்றுக்கும் மேற்பட்ட மாரத்தான் ஓட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். அந்த அனுபவத்தில் இதனை எழுதுகிறேன். ஒரே மூச்சில் நாற்பத்திரண்டு கிலோமீட்டர் ஓடும் மாராத்தான் ஓட்டக்காரன் சும்மா ஓட முடியாது. உடலைத் தன் வசப்படுத்த வேண்டும். அதற்கு முன்பும், பின்பும் அதற்கேற்ற டயட் கடைப்பிடித்தாக வேண்டும். எப்படி?
Add Comment