மன அழுத்தம்தான் இன்றைக்கு மக்களின் பெரும் பிரச்னை. அது வருவதற்கு எத்தனையோ காரணங்கள். வீடு, அலுவலகம், நட்பு வட்டம் என்று எங்காவது ஏதாவது வடிவில் வருகிற ஒரு சிறு பிரச்னைகூட பூதாகாரமாகி மனத்தைக் கவ்வி, சோர்வடைய வைத்துவிடும். அப்போது என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இஷ்டத்துக்குச் சாப்பிடத் தொடங்கிவிடுவார்கள், பலர். பசி இருக்கிறதா இல்லையா என்பதே இல்லை. அழுத்தம் தீர வயிற்றைப் பதம் பார்! இதற்கு எமோஷனல் ஈட்டிங் என்று பெயர். அதாவது ஒழுங்கற்ற உணவு முறை.
இது உண்மையில் பெரிய பிரச்னை தானா? எத்தகைய பின்விளைவுகளைத் தருகிறது? அதை எப்படித் தெரிந்து கொள்வது, மாற்றிக் கொள்வது?
இது குறித்துத் தெரிந்துகொள்ள மருத்துவ உளவியல் நிபுணர் சுனில்குமார், உளவியல் மருத்துவர் செந்தில்குமார், இயற்கை மருத்துவர் நந்தினி ஆகியோரை அணுகினோம்.
Add Comment