9. எடுக்க எடுக்க எண்ணெய்
நவீன உலகில், ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது படையெடுப்பது என்பது கிட்டத்தட்ட தற்கொலைக்குச் சமம். இரண்டு உலகப் போர்களையும் ஏராளமான இதர போர்களையும் கண்டு களித்துவிட்ட பிறகு சற்றே புத்தி சுவாதீனம் அடைந்த மேற்கு தேசங்கள் பிராந்தியத்துக்குப் பிராந்தியம், துறைக்குத் துறை, தேவைக்குத் தேவை சில பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வைத்துக்கொண்டிருக்கின்றன. கூட்டமைப்பு, ஒப்பந்தம், உடன்படிக்கை என்று பல விதமாக அவை அழைக்கப்பட்டாலும் நோக்கம் ஒன்றுதான். எனக்கு ஒரு கஷ்டம் வந்தால் நீ உதவ வேண்டும். உனக்குக் கேடு வரும்போது நான் உடன் இருப்பேன்.
இது பாதுகாப்புத் துறை, ராணுவம் சம்பந்தப்பட்ட இனங்களில் மட்டும் நடப்பதல்ல. வர்த்தக விவகாரங்களில் ஒப்பந்தங்கள் இருக்கும். ஏற்றுமதி-இறக்குமதி சார்ந்த புரிதல்கள் இருக்கும். உளவுத் துறை சார்ந்த உடன்படிக்கைகள் இருக்கும். இன்னதுதான் என்று வரையறுக்கவே முடியாது. நமது கணினிகளில் உள்ள filevault, firewall போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் தேசங்களுக்கு மத்தியில் நிறையவே உண்டு. அவற்றை ஒரு தேசம் மீறும்போது மற்ற தேசங்கள் அதன் மீது நடவடிக்கை எடுக்கும். தடைகள் அறிவிக்கும். ஒருங்கிணைந்து போரே தொடங்கும்.
1990 நான் போகும்போது கப்பலுக்கு வரும் ஆபிஸர் பென்சில் ரப்பர் குழந்தைக்கு வேணும் கேட்டு வாங்கினார்.
Soviet Union book சில வருஷம் முன்னாடி படிச்சவனுக்கு ரொம்ப ஷாக்கிங் ஆக இருந்தது.