9. காலாங்கி நாதர்
சித்தர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில்லை. அவர்கள் இப்புவிக்கு வருவதும் போவதும் புதிரான ஒன்று. ஆனால் அவர்களது வாழ்வும் செயலும் வரலாற்றில் ஆழமாக நிலைபெற்றுவிடுகிறது. அசாதாரணமான இவர்களின் வாழ்க்கை சாதாரணமானவர்களுக்கு விசித்திரமாக இருப்பதால் சித்தர்கள் இறைவன் என்றே பலரால் உணரப்படுகிறார்கள். அறிவுபூர்வமானதாகவும் ஆழமானதாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதால் அவர்கள் பிரம்ம ரூபமாகப் பார்க்கப்படுகிறார்கள். வளமான வாழ்க்கையை ஏற்படுத்தினால் அவர்கள் விஷ்ணுவின் வடிவமாகப் பார்க்கப்படுவார்கள். ஒருவித மாய வித்தையால் மாற்றத்தை உண்டு செய்தால் மஹேஸ்வரனாகப் பார்ப்பக்கடுவார்கள். உண்மையில் இவர்கள் பிரம்மா விஷ்ணு சிவனா என்றால் இல்லை. அதற்கும் மேலே.
குரு கீதையில் ஈஸ்வரன் சொல்லும் வரிகளைப் போல குருவாக வருபவர் சாட்சாத் பரப்பிரம்மா என்பதே இதற்கு பதிலாகும். முழுமையான வடிவம் கொண்டு உலகில் வரும் சித்தர்கள் நமது கண்களிக்கு நமது இஷ்ட தெய்வத்தின் வடிவாகத் தெரிகிறார்கள். அவர்கள் அனைத்துமாகி இருக்கிறார்கள். நாம் விருப்பப்பட்ட வடிவில் அவர்களை குறுக்கி விடுகிறோம்.
Add Comment