10. கோப்பையில் விழுந்த ஈ
தன்னுடைய அரசியல் பயணம் எப்படி இருக்கும்? தனது சாத்வீகமான, சட்டபூர்வமான மிதவாதக் கருத்துகளை அ-மிதவாதிகள்பால் ஈர்க்கப்பட்டுள்ள மாணவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்? ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் அவர்களின் எதிர்வினை எப்படி இருக்கும்? என்கிற கேள்விகள் மோதிலால் நேருவைச் சிந்திக்க வைத்தன. தன் மனவோட்டத்தைத் தனது மகனுடன் பகிர்ந்துகொள்ள அவர் தவறவில்லை.
“நீங்கள் அரசியலில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது. சொல்லப்போனால், இது தாமதமாக நிகழ்கிறது. நீங்கள் எதையும் நிதானமாக அலசி ஆராய்ந்து சாதக, பாதகங்களை சீர்தூக்கிப் பார்த்து முடிவுகளை எடுப்பீர்கள். கருத்துச் சொல்வீர்கள். எனவே, உங்களது அணுகுமுறைக்கு அனைத்து தரப்பினரிடமும் மரியாதை இருக்கும். உங்கள் கருத்துக்கள் மிதவாதக் கண்ணோட்டத்தில் இருந்தாலும், பிரிட்டிஷ் அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும்போது நீங்கள் கடுமையாகவே விமர்சிக்க வேண்டும் என்பது என்னுடைய அழுத்தமான கருத்து” என்று மகன் ஜவஹரிடமிருந்து வந்த பதில் மிகவும் சாதகமாக இருந்தது.
Add Comment