விலைவாசி ஏற்றம் உலகம் முழுதும் கனஜோராக நடந்துகொண்டிருக்கிறது. அது ஒரு பக்கம் கிடக்கட்டும். அமெரிக்காவில் இப்போது வரலாறு காணாத வட்டி விகித ஏற்றம் நடைமுறைக்கு வருகிறது. மொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் இதன் பின்னணி மிகவும் நுட்பமானது.
கடந்த வாரம், அமெரிக்க மத்திய வங்கி நான்காவது முறையாக வட்டி விகிதத்தை ஏற்றி இருக்கிறது. அதுவும் 0.75%. 1980க்கு பிறகு, இதுதான் அமெரிக்க மக்கள் சந்தித்த மிக அதிகபட்ச வட்டி விகித ஏற்றம்.
மிக அதிகமாக ஏறும் விலைவாசியைக் கட்டுப்படுத்தவும் மக்களின் நம்பகத்தன்மையை (consumer confidence) நிலை நிறுத்தவும் இந்த நடவடிக்கை அவசியம் என கட்சி பேதமின்றி பொருளாதார நிபுணர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
நுகர்வுப் பொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி ஏன் விண்வெளியைத் தொடும் வண்ணம் ஏறுகிறது? உக்ரெயின் போரினால் ஏறிய எரிபொருள் விலை மட்டும்தான் காரணமா என்றால், இல்லை.
Add Comment