கடந்த வாரம் கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் தமது செல்பேசி ஹேக் செய்யப்பட்டிருப்பதாகத் தமக்குச் சந்தேகம் உள்ளதென ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார். அதற்கு ஒன்றிரண்டு தினங்கள் முன்னதாக, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. முக்கிய ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் திறன்பேசியை (Smart Phone) ஹாக்கிங் (Hacking) செய்ய முயற்சி என்பதே செய்தி. இந்த முயற்சி வெற்றியடைந்திருந்தால் பிரிடேற்றர் (Predator) எனும் உளவு மென்பொருள் அந்த உறுப்பினரது திறன்பேசிக்குள் நுழைந்திருக்கும். இளங்கோ கிருஷ்ணனின் செல்பேசியில் Predator நுழைந்திருக்க ஒரு சதம் வாய்ப்பும் கிடையாது. இருப்பினும் கைபேசி ஹேக்கிங் தேச எல்லைகள் கடந்து பரவத் தொடங்கியிருப்பதை கவனிக்க வேண்டியிருக்கிறது.
Add Comment