ப்ராக்டிகலா யோசி. உனக்குப் பிடிச்ச காரியம் எழுதறது, இல்லையா. தமிழ்ல எழுதி மட்டுமே பொழைக்க முடியுமா. கசடதபறல ஆரம்பிச்சாலும் இன்னைக்கு குங்குமம் விகடன் குமுதத்துக்கு எழுதற பாலகுமாரன் மாதிரி உன்னால கமர்ஷியலா எழுதமுடியுமா…
10 கூச்சம்
டிரைவ் இன் கூடப் புழுங்கியது. எங்கோ வெறித்தபடி காபி குடித்துக்கொண்டிருந்தான். அன்று மாலை 6:30 மணிக்கு சோவியத் கல்ச்சுரல் செண்ட்டரில் ஹங்கேரி படம். ஆபீஸிலேயே 7 மணி ஆகி, அதற்குப் போகமுடியாமல் போனதில் துக்கம் முட்டிக்கொண்டு வந்தது.
என்ன ஒரு மாதிரி இருக்கே என்றான் ராஜன் சர்மா.
ப்ச் ஆபீஸ் கடியா இருக்கு.
நம்பள மாதிரி ஆட்களுக்கு ஆபீஸ் கடியா இல்லாம இருந்தாதான் ஆச்சரியம்.
அன்று திரையிடப்படுகிற படம் பற்றிச் சொன்னான்.
Add Comment