Home » மின்நூல்கள்: வாசிப்பின் எதிர்காலம்
நுட்பம் மின்நூல்

மின்நூல்கள்: வாசிப்பின் எதிர்காலம்

புத்தக வாசிப்பு என்பது தமிழ் நாட்டைப் பொறுத்தவரை தொடக்கம் முதலே மைனாரிடிகளின் செயல்பாடாக மட்டுமே இருந்து வருவது. தமிழில் பல்லாயிரக் கணக்கில் வாங்கப்பட்டது திருக்குறளாகவும் படிக்கப்பட்டது பொன்னியின் செல்வனாகவும் இருக்கும். அதுவுமே பல அல்லது சில லட்சக் கணக்காக ஒருவேளை இருந்துவிடுமோ என்பது நப்பாசைதான். இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு. வாசிப்புக்கு எதிரான மனநிலை என்பது அரசியல் மற்றும் சமூக ரீதியில் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டு வந்திருக்கும் சமூகம் இது. பக்கத்து மாநிலங்களான கேரளம், கர்நாடகம் இரண்டிலுமே தமிழைக் காட்டிலும் பல மடங்கு அதிகமான வாசகர்கள் இருக்கிறார்கள். அவ்வப்போது இதனைக் குறிப்பிட்டு வருத்தப்பட்டுக்கொண்டே நாம் வாசிப்பு மைனாரிடிகளாகத் தொடரப் பழகிவிட்டோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

  • 100% துல்லியமான கணிப்பு.இளைய தலைமுறைகளை உற்று நோக்கி நான் எண்ணியதை அப்படியே சொல்லிவிட்டீர்கள்.தாய்மொழியில் கல்வி கற்காததே முக்கிய காரணம்.தமிழை ஆங்கிலத்தில் எழுதுகிற கொடுமையை தாங்க முடியவில்லை.என் பேரன் பேத்தி யூடியூப்பில் விஷுவலாக பார்க்கவே விரும்புகிறார்கள்.மொழியறிவு மற்றும் கற்பனைத்திறன்
    இல்லாமல் போய்விடுமே என்று கவலையாக உள்ளது.

  • என் மகன் +2 படிக்கிறான்…
    பொன்னியின் செல்வன் படிக்கச் சொல்லி கெஞ்சுகிறேன்.படம் வருதுல்ல பார்த்தா போதும்கிறான் …

    காரைக்காலை கே.பிரபாகரன்
    prabak78@gmail.com

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!