பிரபல ஆங்கில எழுத்தாளர்களின் அச்சுப் புத்தகங்கள் வெளியாகும் போதே இன்னொரு பக்கம் சுடச்சுட அவற்றின் திருட்டு அச்சுப் புத்தகங்களும் வெளியாகும். திருட்டுச் சந்தை என்பது பதினேழாம் நூற்றாண்டில் இருந்து இருந்து வருவது. அதிகாரபூர்வப் பதிப்பின் விலையில் பாதி இருக்கும். அல்லது அதற்கும் கீழே. அச்சு மோசமாக இருக்கும். தாள் கேவலமாக இருக்கும். பைண்டிங் நிற்காது. விரைவில் பிய்ந்துவிடும். இதெல்லாம் ஒரு பொருட்டில்லை; என் அபிமான எழுத்தாளரின் புத்தகம் நான் வாசிக்கத் தக்க மலிவு விலையில் கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்கள் இந்தத் திருட்டுச் சந்தையை ஆதரித்து வந்தார்கள்.
ஒரு கட்டத்தில் இது திருட்டுப் பதிப்பு என்று தெரியாமலேயே மக்கள் அதில் சென்று விழுந்ததும் நடந்தது. ஆயிரம் இரண்டாயிரம் வாசகர்கள் அல்லர். பல லட்சக் கணக்கில் உலகெங்கும் குவியும் வாசகர்களுக்கே இவர்கள் வலை விரித்தார்கள்.
மிக சிறப்பான கட்டுரை. திருட்டு புத்தகச்சந்தை எங்கு தொடங்கியது என்றுஆரம்பித்து அதன் தற்போதைய பரவலை விரிவாக அலசியது கட்டுரை. டிஜிட்டல் யுகத்தில் இந்த திருட்டுக்களை தடுப்பது கடினமே. உண்மையான வாசகர்கள் விலை கொடுத்தே நூல்களை வாங்கி வாசிக்க விரும்புவார்கள். இந்த டிஜிட்டல் திருட்டை தடுக்க வாசகர்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அதை ஓரளவிற்கு இந்த கட்டுரை ஏற்படுத்தி உள்ளது. பாராட்டுக்கள்