11. யுத்தத்தின் தோற்றுவாய்
பூமி எவ்வளவு பெரியது; தேசங்கள் எங்கெல்லாம் விரிந்து பரந்திருக்கின்றன என்று சரியாகத் தெரியாத காலத்திலேயே சில மன்னர்கள் புவி மொத்தத்தையும் ஆள நினைத்தார்கள். அதற்காகப் படையெடுத்துப் பாதி வழியில் ஊர் திரும்பினார்கள் அல்லது செத்துப் போனார்கள். பின்னர் பிரிட்டன் உலகெங்கும் திட்டுத் திட்டாகத் தனது காலனிகளை நிறுவி, தானே முதல்வன் என்று நிரூபிக்கப் பார்த்தது. ‘நீ காலனி வைத்தால்தானே கந்தர கோளம்? என் காலடி பட்டாலே அதுதான்’ என்று முதல் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா தன்னை வல்லரசாக நிறுவிக்கொண்டது.
Add Comment