12. உத்திகள், திட்டங்கள்
அதிபராகப் பதவி ஏற்ற பின்னர், அதிபர் மாளிகையையாவது அவர் முழுதாகச் சுற்றிப் பார்த்திருப்பாரா என்று தெரியவில்லை. கண்ணை மூடித் திறப்பதற்குள் கோவிட்; இன்னொரு முறை மூடித் திறப்பதற்குள் யுத்தம்.
உண்மையில் போர் தொடங்கிய முதல் சில நாள்களில் உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஸெலன்ஸ்கிக்கு அவரது உளவுத் துறையும் இதர நட்பு நாடுகளும் அளித்த தகவல்கள் முற்றிலும் வேறு. இந்தப் போர் நெடுநாள் தொடராது. சிறிய அச்சுறுத்தலாக மட்டுமே இருக்கும். மிஞ்சிப் போனால் மூன்று வாரங்களில் முடிந்துவிடும்.
மறுபுறம் புதினுக்கும் அவரது தளபதிகள் அதையேதான் சொன்னார்கள். மிஞ்சிப் போனால் மூன்று வாரம். உக்ரைன் விழுந்துவிடும்.
Add Comment