13. பூத்துக் குலுங்கும் கலை
Do not empty the ocean with a teaspoon- Osho
கிரேக்க நாட்டின் மிகப் பெரிய தத்துவவாதி பிளேட்டோ. அவருடைய சமகாலத்தவர்தான் டயோஜினிஸ். இருவருக்குமிடையே கடுமையான முரண்பாடு நீடித்து வந்தது. ஏனென்றால் டயோஜினிஸ் ஓர் ஆன்மீகவாதி. பிளேட்டோவால் கனவில்கூட அறிய முடியாத பல உண்மைகளை டயோஜினிஸ் அறிந்திருந்தார்.
வரலாறு மற்றும் தத்துவ நூல்களில் நீங்கள் பிளேட்டோவின் பெயரைப் பார்க்க முடியும். ஆனால் டயோஜினிசின் பெயர் எங்கும் இருக்காது. டயோஜினிஸ் ஒரு குழந்தையைப் போல வெகுளியானவர். ஆயிரம் பிளேட்டோக்கள் வந்தாலும் அறிய முடியாதவற்றை அவர் அறிந்திருந்தார்.
ஒருநாள் பிளேட்டோ கடற்கரையோரம் நடந்து கொண்டிருந்த போது அதிகாலை இருட்டில் அரைகுறையாக எதிரே ஒரு மனித உருவம் கடல் நீருக்குள் அமர்ந்திருக்கக் கண்டார். அந்த நபர் டயோஜினிஸ் தான்.
Add Comment