13. கோரக் நாத்
சித்த மரபு விசித்திரம் நிறைந்தது. நமது ஆற்றலுக்கும் அறிவுக்கும் அப்பாற்பட்டு நடைபெறுவதால் சித்தர் உலக விவகாரங்கள் அனைத்தும் அமானுஷ்யமாகப் பார்க்கப்படுகிறது. சித்தர்கள் நம்மைவிட ஒருபடி மேலான நிலையில் இருக்கிறார்கள் என்பதை நமது மனம் ஏற்றுக்கொள்ளும். உயிர்களின் பரிணாமத்தில் ஒரு செல் துவங்கி மனித நிலையை அடையப் பல மில்லியன் வருடங்களானது என விஞ்ஞானம் கூறும்.
ஆன்மீகத்திலும் இது போலப் படிப்படியான பல்வேறு உயிர்களாக ஜனித்து உயிர் பரிணாமம் அடையும் என்பதை ஞானிகளின் வார்த்தைகளில் காணலாம். பல்லாயிரம் வருடங்களாக நிகழும் இந்தப் பரிணாம வளர்ச்சி நாம் மனித நிலை அடைந்த பிறகு வேறு எதுவாக மாற்றம் அடையப் போகிறது?
Add Comment