இருபத்து ஏழு நாட்டுத் தலைவர்கள் ஒரே ஃப்ரேமில் போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்று 2019ம் ஆண்டு வெளியானது. அந்த இருபத்து ஏழில் ஒரே ஒருவரை முன்னிட்டு, அந்த சாதாரணப் புகைப்படம் உலகப் புகழ் பெற்றது.
அவர் ஒரு பெண். அதுவும் இள வயதுப் பெண். அசப்பில் கல்லூரிப் பெண் தோற்றம். சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். அதெல்லாம் பழங்கதை. இப்போதைய கதையே வேறு. உலகிலேயே மகிழ்ச்சியான நாடான பின்லாந்தின் பிரதமர் அவர். பெயர், சன்னா மரின். சன்னா மிரெல்லா மரின் என்பது முழுப் பெயர்.
Add Comment