துபாய் மாலில் இருக்கும் ஒவ்வொரு கடையிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பெருஞ்சத்தம், என் காதுகளை மட்டுமில்லாமல் அங்கிருந்தவர்களையும் சில நொடிகள் பதற வைத்தது. சட்டென்று திரும்பிப் பார்க்கும் போது, கடைக்கு வெளியே ஐந்து வயதுச் சிறுமியொருத்தி வாசலில் விழுந்து கிடந்தாள். அவளது தாய் கடைக்குள் இருந்து ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டு, மீண்டும் கடைக்குள் சென்று விட்டாள். கண்ணாடிக் கதவு மூடி இருந்தது தெரியாமல், தாயிடம் செல்ல வேகமாக ஓடி வந்ததால், நெற்றியில் பலமான அடி. டென்னிஸ் பந்தளவு அவள் நெற்றி வீங்கிவிட்டது. கடைக்காரர் ஒரு பக்கம் ஐஸ் கட்டிகள் கொண்டு வந்து டிஷ்யூவில் வைத்து கொடுத்தார். இப்படி நாலாபுறமும் பரபரப்பாக இருந்தது. குழந்தையின் அம்மா, அவளைச் சமாதானப்படுத்தி, கண்களை மூடி, நெற்றியைத் தொடாமல் காற்றில் கைகளை அசைப்பது போல் ஏதோ செய்ய ஆரம்பித்தாள். பதினைந்து நிமிடத்திற்குள் அந்த குழந்தையின் நெற்றி பழைய நிலைக்கு திரும்பியது.
Add Comment