அரசு மருத்துவமனைகளில் மாற்று மருத்துவத் துறை எப்படிச் செயல்படுகிறது? நேரில் பார்த்தறியப் புறப்பட்டோம்.
தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஓமந்தூராருக்குச் சென்றோம். ஆறு தளங்களிலும் என்னென்ன பிரிவுகள் எனத் தமிழில் ஒரு பக்கம் ஆங்கிலத்தில் ஒருபக்கம் எழுதியிருந்தது. இரண்டாவதுமுறை படித்தும் சித்தாவோ ஆயுர்வேதமோ காணவில்லை. வரவேற்பில் கேட்டோம். “அந்தப் பிரிவுகள் இங்கே இல்லை. என்ன பிரச்சினை உங்களுக்கு..?”
Add Comment