14. சர்வ நாச பட்டன்
அமெரிக்க-ரஷ்ய பனிப்போர் அதன் உச்சத்தை நெருங்கிக்கொண்டிருந்த சமயம். ரஷ்யாவின் அணு ஆயுத சொகுசு சௌகரியங்களைக் கண்காணிப்பதற்கென்று அமெரிக்காவும் அதன் தோழமை (ஐரோப்பிய) தேசங்களும் இணைந்து ஒரு நிழல் உளவுத் துறையையே உருவாக்கிச் செயல்பட வைத்திருந்தன. இது ரெகுலர் உளவுத் துறையல்ல. அணு விஞ்ஞானிகள், கப்பல் கேப்டன்கள், அனுபவம் மிக்க போர் விமானிகள், சி.ஐ.ஏ அதிகாரிகள், ஆயுதவியல் வல்லுநர்கள், இதர தேசங்களின் பல்வேறு (அவசியப்பட்ட) துறைகள் சார்ந்த விற்பன்னர்களை உள்ளடக்கிய ஒரு மாதிரி ‘பாரா உளவுத் துறை’ என்று வைத்துக்கொள்ளுங்கள்.
Add Comment